
INTRO :
இந்தோனேசியாவில் 62 பேருடன் பயணித்த விமானம் விபத்திற்கு உள்ளாகும் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

RadioTamizha FM என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்தோனேசியாவில் உள்நாட்டு சேவையில் ஈடுபட்டிருந்த சிறிவிஜாயா (Sriwijaya) எயார் லைன்ஸ் விமானம் ஒன்று 60 பயணிகளுடன் ஜாவா கடலில் (Java Sea) வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
ஜக்கார்த்தாவின் சுஹர்னோ – ஹட்டா (Soekarno-Hatta) விமான நிலையத்தில் இருந்து நாட்டின் மேற்கு கலிமன்தான் (West Kalimantan) மாகாணத்தின் தலைநகர் Pontianak விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த போயிங் 737 (Boeing 737) ரக விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகி இருக்கிறது.” என இம் மாதம் 11 ஆம் திகதி (11.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில் நாம் குறித்த வீடியோவை பார்வையிட்ட வேளையில், விமானத்தின் பின் இறக்கையில் எத்தியோப்பிய தேசிய கொடியின் வர்ணங்கள் இருப்பதை அவதானித்தோம்.

நாம் அதன் அடிப்படையில் யூடியுப் தளத்தில் மேற்கொண்ட தேடலின் போது எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பாக 2014 ஆண்டில் வெளியான ஒரு வீடியோ கிடைக்கப்பெற்றது.
அதில் இருந்த வீடியோவும் தற்போது இணையத்தில் இந்தோனேசிய விமான விபத்து என பகிரப்படும் வீடியோவும் ஒன்று என கண்டறியப்பட்டது.
நாம் மேற்கொண்ட தேடலின் போது, இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் வீடியோ என பகிரப்படும் வீடியோ எத்தியோப்பிய விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் வீடியோவா இது?
Fact Check By: Nelson ManiResult: False