கைலாசாவின் நாணயத்தாள் வெளியானது என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

புதுசுடர் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரத்தில் இருக்கும் நாட்டை குறிப்பிடும் வகையில் எதையும் கண்டறியவில்லை. ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்கும் நித்தியானந்தாவைத் தேடி வரும் நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, காணொளிக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த சூழலில் இப்போது கைலாசாவின் கரண்சி தயார் எனக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. [ 119 more words ]

http://puthusudar.lk/…/%e0%ae%95%e0%af%88%e0%ae%b2%e0%ae%b…/ ” என்று இம் மாதம் 17 ஆம் திகதி (17.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு ஆய்வினை மேற்கொண்ட போது, குறித்த நாணயத்தாளில் பல்வேறு பிழைகள் இருப்பது காணக்கிடைத்தது.

குறிப்பாக நித்யானந்தா முழு பெயரை Nithyananda Paramashivam என்றில்லாமல், ‘Nithyananda paramashivam’ என தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். கைலாசா ஆங்கில ஸ்பெல்லிங் Kailasa என்பதற்கு பதிலாக, Kailasha என உள்ளது. அத்துடன், ‘கைலாசாவின் ரிசர்வ் வங்கி’ எனக் குறிப்பிட்டுள்ளதும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.

மேலும் விநாயகர சதுர்த்தி அன்றே புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய இவ்வருடம் விநாயகர சதுர்த்தி நாளைய (22.08.2020) தினத்திலே கொண்டாடப்படவுள்ளது.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எவ்வாறு கடந்த 17 ஆம் திகதி நாணயத்தாள் வெளியிடப்பட்டிருக்கும் எனும் சந்தேகம் எமக்கு ஏற்பட்டது.

இது குறித்து எமது இந்திய தமிழ் பிரிவினர் நித்யானந்தாவின் உத்தியோகப்பூர்வ இணையதளமான https://kailaasa.org/ வழியாக தொடர்புகொண்டு, இந்த நாணயத்தாள் உண்மையா, பொய்யா என விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு, ஊடகங்கள் உருவாக்கிய வதந்தி இது, என்று பதில் கிடைத்தது. அந்த பதிலை கீழே இணைத்துள்ளோம்.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதற்கமைய தற்போது கைலாசாவின் நாணயத் தாள் என பரப்பப்படுகின்ற நாணயத்தாள் போலியானது என்று நாம் மேற்கொண்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கைலாசாவின் நாணயத் தாள் உண்மையா?

Fact Check By: Nelson Mani

Result: False