
INTRO :
நாசி- அல்-கார்கி இற்கு சொந்தமான சொத்துக்கள் இவை என சில புகைப்படங்கள் அடங்கிய புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

The Islamic Sunnah என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #குவைத் கோடீஸ்வரர் நாசி- அல்- கார்கி காலமானார் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் தான் இவைகள் இதில் முக்கிய செய்தி என்னவென்றால் போகும் போது இவரால் எதையும் கொண்டு போக முடியவில்லை. இது தான் வாழ்க்கை தரும் படிப்பினை.
ALLAH IS GREAT.
தங்க கட்டில்லில் தூங்கிய வரு இப்போ தூங்கும் இடம்
நிரந்தர மண்ணறை இதுதான் அவரின்
நிரந்தர வாழ்க்கை.
படிப்பினைகள் நிறைய இருக்கின்றன இதில்…
😭😭😭
#Copy” என கடந்த மாதம் 06 ஆம் திகதி (06.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படங்களை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
அத்தேடலின் போது, குறித்த ஒவ்வொரு புகைப்படங்களும் வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
தங்கத்தினால் ஆன் விமானம் என பகிரப்பட்ட விமானம் Dassault Falcon 900B என்ற விமானமாகும் இது Proair Charter Transport நிறுவனத்துடையது.

தங்கத்தினால் ஆன கப்பல் தொடர்பாக நாம் தேடியபோது, அமெரிக்காவில் Sturgeon Bay என்ற இடத்தில் 2014 ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.
yachtcharterfleet| Archived Link
குறித்த புகைப்படத் தொகுப்பில் இருந்த பணத்தொகையானது, 2016 ஆம் ஆண்டு போதை பொருள் கடத்துபவர்கள் ஆன அண்ணன் மற்றும் தங்கை 24 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் பெறுமதியான பணம் மியாமி வீட்டில் கைப்பற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

தங்க கட்டில் குறித்த கட்டில் இந்திய மதிப்பில் 5.65 இலட்ச ரூபாயிற்கு விற்பனை செய்ய உள்ளமை எமது தேடலில் இருந்து கிடைத்தது.

Exporters india | Archived Link
வைரத்தினால் ஆன படிக்கட்டுக்கள் MSC Fantasia என்ற கப்பலில் அமையப் பெற்றுள்ளமை காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட தேடலில் குவைத் கோடீஸ்வரர் நாசி- அல்- கார்கியின் சொத்துக்கள் என பகிரப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:குவைத் கோடீஸ்வரர் நாசி- அல்- கார்கியின் சொத்துக்களா இவை?
Fact Check By: Nelson ManiResult: False