யாரும் காண கிடைக்காத பீனிக்ஸ் பறவை என்று ஒரு பறவையின் புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

சசிகுமார் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இது தான் பீனிக்ஸ் பறவை காண கிடைக்காத ஒன்று.... #share பண்ணுங்க எல்லாரும் பார்க்கட்டும்.....” என்று 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி (05.12.2018) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த செய்தி கிட்டத்தட்ட 76 ஆயிரம் பேரினால் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது. தற்போது வரையும் குறித்த புகைப்படம் மக்கள் மத்தியில் பரவி வருகின்றமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த புகைப்படத்தினை நாம் நாம் Google Reverse Image Tool  பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்தியவேளையில் குறித்த புகைப்படத்தில் உள்ள பறவையானது ஒரு விளையாட்டுப் பொருள் என்று கண்டறியப்பட்டது.

மேலும் இதற்கு தண்டர் பேர்ட் (Thunderbird) எனப் பெயரிட்டு அழைக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

Website link | Archived link

குறித்த இணையத்தளத்தில் பதியப்பட்டுள்ள விபரக்குறிப்பில் குறித்த பொம்மையானது முற்றாக கைகளால் செய்யப்பட்டவையாகும். மேலும் அதன் கண்கள் கண்ணாடியினால் ஆனவை என அவர்களே தெரிவித்துள்ளனர்.

உலக பிரசித்திப்பெற்ற ஹாரி பாட்டர் (Harry Potter) படத்தில் பீனிக்ஸ் என்ற பறவை கற்பனையில் சித்தரித்து உயிரூட்டம் கொடுத்திருந்தனர்.

அதை போலவே, பான்டஸ்டிக் பிரஸ்டஸ் (Fantastic Beasts) என்ற திரைப்படத்தில் இந்த தண்டர் பேர்ட் (Thunderbird) என்ற கற்பனை பறவைக்கு உயிரோட்டம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் Gakman Creatures என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு முதல் பொம்மை விற்பனையில் ஈடுப்பட்டு வந்த ரஷ்யாவை சேர்ந்த Ekaterina Gakman என்ற பெண் முதல்முதலாக இந்த தண்டர் பேர்ட் (Thunderbird) என்ற கற்பனை பறவையின் உருவ பொம்மையினை செய்து விற்பனை செய்துள்ளார்.

அதில் அவர் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்தினை தற்போது பீனிக்ஸ் பறவையின் புகைப்படம் என்று பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கமைய பீனிக்ஸ் பறவை என பேஸ்புக்கில் பகிரப்பட்ட வந்த புகைப்படம் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் பறவை என்பது கிரேக்க புராண கதைகளில் கூறப்படும் கற்பனை உயிரினமாகும். உண்மையில் அப்படி ஒரு பறவை இனம் பூமியில் கிடையாது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பீனிக்ஸ் பறவை என பேஸ்புக்கில் பகிரப்பட்ட வந்த புகைப்படம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Avatar

Title:பீனிக்ஸ் பறவையா இது?

Fact Check By: Nelson Mani

Result: False