
INTRO :
108 வயது நிரம்பிய பள்ளி தோழிகள் இருவரும் சந்தித்துக்கொண்ட தருணம் என்று ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
Jaffna Jet என்ற பேஸ்புக் கணக்கில் ” 108(இருவருக்கும் 108 வயது) வயது பள்ளி தோழிகள் இருவரும் சந்தித்துக்கொண்ட அழகிய தருணம் Keep in Touch with Your Friends and Family through Hi2world.com” என இம் மாதம் 21 ஆம் திகதி (21.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில் நாம் குறித்த புகைப்படத்திலிருந்த Watermark என்ன என்று ஆய்வினை மேற்கொண்ட போது அது இந்தியாவில் கேளரா மாவட்டத்தில் இயங்கும் ஓர் பத்திரிக்கை நிறுவனமாகிய mathrubhumi.com உடையது என கண்டறியப்பட்டது.
அதன் பிறகு எமது இந்திய குழுவினர் உதவியுடன் நாம் குறித்த புகைப்படத்தினை எடுத்த mathrubhumi.com-ல் பணியாற்றும் புகைப்படக்கலைஞரை நாம் தொடர்புக்கொண்டோம்.
குறித்த புகைப்படத்தினை படமெடுத்த லத்தீஷ் பூவத்தூர் என்பவரிடம் வினவிய போது, இது கேரளாவில் நடந்த தேர்தலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், என்று தெரிவித்தார்.
அதில், ஒருவருக்கு 100 வயதிற்கு மேல் என்றும் மற்றவரின் வயது 80-க்கு மேல் என தெரிவத்தார். இவர்கள் இருவரும் வாக்களிப்பதற்கு வந்த வேளையில் சந்தித்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், அவர் தெரிவித்திருந்தார்.
நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய குறித்த புகைப்படம் தொடர்பில் பகிரப்படும் கருத்தான 108 வயது நிரம்பிய பள்ளி தோழிகள் சந்தித்த தருணம் என்பது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.