
INTRO :
படைவீரரை ஒரு சிறுமி எதிர்ப்பதை போன்ற புகைப்படத்திற்கு பள்ளி வாசலுக்காகாக உயிரை விடவும் தயார் பாலஸ்தீன வீரம் என்று பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Prince Mohamed Jalaludeen என்ற பேஸ்புக் கணக்கில் ” உலகமே வியக்கும் படம் பள்ளி வாசலுக்காக உயிரைவிடவும் தயார் பாலஸ்தீன வீரம்” என இம் மாதம் 16 ஆம் திகதி (16.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். குறித்த தேடலின் போது சிலி நாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.
cnn.com I Archived Link
சிலி நாட்டினை இராணுவம் கைப்பற்றியதை நினைவு கூறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்களை பொலிஸார் எழுமாறாக கைது செய்யும் போது இந்த அடையாளம் தெரியாத குறித்த பெண் பொலிஸாரை எதிர்த்து நின்ற போது குறித்த புகைப்படத்தினை எடுத்ததாக Carlos Vera Mancilla என்ற புகைப்படக்கலைஞர் buzzfeednews என்ற இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

buzzfeednews.com Link I Archived Link
நாம் மேற்கொண்ட தேடலுக்கு பாலஸ்தீன பெண் இராணுவத்தினை எதிர்க்கும் புகைப்படம் 2016 ஆம் ஆண்டு சிலி நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பாலஸ்தீன பெண் இராணுவத்தினை எதிர்க்கும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False