INTRO :
பதுளையில் பெய்த மீன் மழை என்ற ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Lucky Suresh என்ற பேஸ்புக் கணக்கில் ” "இலங்கை" பதுளை அருகே உள்ள பிரதேசங்களில் கடந்த இரு தினங்களாக மீன் மழை பொழிவு.100 kg அளவிலான மீன்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.22/12/2020 ” என இம் மாதம் 22 ஆம் திகதி (22.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படங்களை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த பதிவிலிருந்த இரு புகைப்படங்கள் 2015 ஆம் ஆண்டு சீனாவில் நெடுங்சாலையில் catfish கொண்டு சென்ற லொறியின் கதவு திறந்தமையால் வீதியில் விழுந்த மீன்கள் என கண்டறியப்பட்டது.


Dailymail | Archived link

இது 2015 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் இடம்பெற்றுள்ளது. இது மீன் மழையல்ல மீன்களை ஏற்றி சென்ற லொறியின் கதவு திறக்கப்பட்டமையால் வீதியில் கொட்டப்பட்டுள்ளது.

பதுளையில் இம்மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் (20.12.2020,21.12.2020) பெய்த மீன் மழையின் போது பதியப்பட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய பதுளையில் பெய்த மீன் மழை என பகிரப்படும் புகைப்படங்கள் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பதுளையில் பெய்த மீன் மழை; உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani

Result: Partly False