INTRO :
யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் அரிய புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” எங்கள் பொக்கிஷமாக இருந்த யாழ்பாண நூலகம்

தெற்காசியாவின் மிகப் பெரிய பழமைவாய்ந்த நூலகம்....

1936ல் எடுக்கப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் அரிய புகைப்படம்...!! “ என கடந்த மாதம் 29 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (29.09.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்த போது, இது யாழ்ப்பாணத்தின் பொது நூலகத்தினை போன்று இல்லமையினால் குறித்த புகைப்படத்தின் மீது எமக்கு சந்தேகம் எழுந்தது.

மேலும் நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை.

எனவே நாம் யாழ்ப்பாண நூலகம் தொடர்பாக வெளியாகிய சில புத்தங்கள் பற்றி ஆய்வினை மேற்கொண்டோம்.

அதற்கமைய யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது என்ற புத்தகத்தினை வி.எஸ் துரைராஜா தொகுத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த புத்தகத்தில் நூலக கட்டிட வரைபடங்கள், சேதமுற்ற நூல்நிலையம், மற்றும் மாநகர சபைக் கட்டிடங்கள், புதிய நூலகத்தின தோற்றம் என்பவற்றுடன் வெளியிட்டிருந்தார்.

அதில் தற்போது யாழ்ப்பாண நூலகத்தின் புகைப்படம் என பகிரப்படும் குறித்த புகைப்படமானது யாழ்ப்பாண நகராட்சி மன்றம் என குறிப்பிட்டுள்ள புகைப்படம் எமக்கு கிடைக்கப்பெற்றது.

மேலும் 1936 ஆம் ஆண்டு கட்டப்பட்டு யாழ்ப்பாண நகராட்சி மன்றம் என்றும், 1949ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம் என்றும் அறியப்பட்டு, 1985ம் ஆண்டில் நடந்த யுத்தத்தில் அழிக்கப்பட்ட கட்டத்தின் தோற்றம் என குறிப்பிட்டிருந்தமையும் எம்மால் காணக்கிடைத்தது.

நாம் யாழ்ப்பாண நூலகம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்ட போது, 1933 ஆம் ஆண்டு லங்கா ஹவுஸ் என்ற பெயரில் செல்லப்பா என்பவரின் வீட்டில் சிறிய வாசகசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு நகராட்சி மன்றமாக விளங்கிய சபையானது, மாநகர சபையாக உயர்த்தப்பட்டு, ஏ.சபாபதி நகர பிதாவாகவும் தலைமை பெற்றார். அதன் பின்னர் அவர் தலைமையில் நகரசபைக்கு அண்மையில் யாழ்ப்பாண வாசிகசாலைக்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் செய்யப்பட்டு 1953 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாசகசாலைச் சங்கமமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 1954 ஆம் ஆண்டு கட்டடத்துக்கு அத்திவாரம் இடப்பட்டு 1959 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் நடக்கவிருந்த காலக்கட்டத்தில் ஜூன் 1ஆம் திகதி யாழ்ப்பாண வாசகசாலைக்கு தீ வைக்கப்பட்டது.

தீக்கிரையான வாசகசாலை 1982 ஆம் ஆண்டு மீண்டும் புரனமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

1985 ஆண்டு யுத்தம் தலை தூக்க மீண்டும் யாழ்ப்பாண வாசகசாலை யுத்தத்தினால் முற்றாக தேசமடைந்தது.

1997 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ் யாழ்ப்பாண வாசிகசாலை மீண்டும் இருந்ததை போன்று நிர்மாணிக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் முற்றுப்பெற்றன. குறித்த யாழ் வாசகசாலை 2004 ஆம் ஆண்டு மீளவும் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

இதற்கமைய யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் புகைப்படம் என பகிரப்பட்ட புகைப்படமானது யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம் என கண்டறியப்பட்டது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இது யாழ்ப்பாண பொது நூலகத்தின் புகைப்படமா ?

Fact Check By: S.G.Prabu

Result: False