
INTRO :
ஒரு வீடியோவில் பிசாசு தென்பட்டதாக கூறி, இலங்கையில் பல மாவட்டங்களில் குறித்த வீடியோ அந்த மாவட்டத்தில் தென்பட்டது என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” சம்மாந்துறையில் காணப்பட்ட பிசாசு.
இவ்வீடியோ கடந்த ஓரிரு நாட்களாக வைரலாகிக்கொண்டிருக்கின்றது இது உண்மையா? பொய்யா எனத்தெரியாது. “ என கடந்த மாதம் 31 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு (31.10.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
https://www.tiktok.com/music/original-sound-7161236545981860634
https://www.tiktok.com/music/original-sound-7160626598377573122
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவில் இருந்து எடுத்த சில ஸ்கீரின் ஷாட்டினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, Joseph Njovu visuals என்பவரின் டிக்டொக் வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த வீடியோ ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் முதல் கமெண்டில் இது இந்தோனேசியாவில் நடந்தது என்று பலர் தெரிவிக்கின்றனர். எவ்வாறு நான் செய்ததை நானே திருட முடியும் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

https://www.tiktok.com/music/original-sound-7135908282743573254
இதனை தொடர்ந்து அவரின் டிக்டொக் கணக்கிலிருந்த யூடியுப் பக்கத்தினை நாம் பார்வையிட்ட போது குறித்த வீடியோ எவ்வாறு உருவாக்கம் செய்யப்பட்டது என்ற வீடியோ பதிவும் எமக்கு கிடைக்கபெற்றது.
மேலும் இவரை பற்றி ஆய்வு செய்த போது, இவர் ஒரு vfx கலைஞர் என கண்டறியப்பட்டது. இவரின் டிக்டொக் மற்றும் யூடியுப் கணக்குகளில் இது போன்ற பல வீடியோக்கள் இவரினால் உருவாக்கப்பட்ட விதம் அடங்கிய வீடியோ எமக்கு காணக்கிடைத்தது.
இதற்கமைய இலங்கையில் பல மாவட்டங்களை குறிப்பிட்டு பரவி வருகின்ற குறித்த பிசாசின் வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team