
INTRO :
வெள்ளை யானை என்று ஒரு புகைப்படத் தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Thoduwanam – தொடுவானம் என்ற பேஸ்புக் கணக்கில் ” வெள்ளை யானை 😮🐘 கண்டிருக்கிறீங்களா?” என இம் மாதம் 13 ஆம் திகதி (13.04.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பதியப்பட்டிருந்த குறித்த புகைப்படத்தொகுப்பினை நாம் கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி புகைப்படத்தொகுப்பில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்த போது, dailymail இணையத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த செய்தியினை நாம் பார்வையிட்ட போது, அதில் தலைப்பிலே வெண்களியில் தன்னை மூடிய யானை என்று தலைப்பிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

dailymail.co.uk | Archived Link
பேஸ்புக் பக்கங்களில் மற்றும் கணக்குகளில் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள கணக்குகளில் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள Watermark பயன்படுத்தி நாம் ஆய்வினை மேற்கொண்ட போது,

Anje Denker அவர்களின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கம் எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதில் அவர் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த குறித்த புகைப்படத்திற்கு, இது உண்மையிலேயே வெள்ளை யானையா என்று ஒரு பயனாளர் கேட்க அது வெண்களியால் தன்னை வெள்ளையாக மாற்றியுள்ளது என பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

எமது தேடலுக்கு அமைய, வெள்ளை யானை என பகிரப்படும் புகைப்படங்கள் என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.