
INTRO :
சீனாவில் ஷாங்காயில் அமைந்துள்ள நண்பன் பாலம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

“ The Shanghai friendship bridge is the Asia’s first biggest bridge… மில்லியன் யுவான் RMB மொத்த முதலீடான ஷாங்காய் நண்பன் பாலம் ஆசியாவிலேயே முதல் பாலமாகும்…. ” என கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.08.2021) பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.
இது உண்மையென நம்பி பலரும் இதனை பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
முதலில் கூகுள் தேடு தளத்தில் Shanghai friendship bridge என தேடியபோது எமக்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நாம் மீண்டும் Shanghai bridge என தேடியபோது, Nanpu bridge பாலத்தில் வீடியோ கிடைக்கப்பெற்றது. குறித்த வீடியோவை பார்வையிட்ட போது இது இணையத்தில் பகிரப்படும் வீடியோவில் உள்ள பாலத்தின் அமைப்பை கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இந்த வீடியோ மேலும் பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தமையும் எம்மால் காணக்கிடைத்தது.
குறித்த வீடியோவை நன்கு அவதானித்தபோது, ஒரே வாகனங்கள் மீண்டும் அடுத்த அடுத்த பாதைகளில் செல்லுவது எமக்கு காணக்கிடைத்தது.

வீடியோவில் இருந்து எடுத்த Screenshot ஐ கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்கையில், ஷாங்காய் பகுதியில் உள்ள Nanpu bridge-ஐ வைத்து டிக்டாக்விற்காக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் கிடைத்தன. அவையும், வைரல் செய்யப்படும் வீடியோ போன்றே இருப்பதை பார்க்க முடிந்தது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஷாங்காய் நண்பன் பாலத்தின் வீடியோ என பகிரப்படும் வீடியோ முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இணையத்தில் பரவுகின்ற ஷாங்காய் நண்பன் பாலத்தின் வீடியோ உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False