
INTRO :
இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கி உள்ள நிலையில் ஒரு குழந்தை கொரோனா வைரஸால் பாதுக்கப்பட்டுள்ள நிலை என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Moganeswaran Chettiar என்ற பேஸ்புக் கணக்கில் ” 🛑ළමයින් පරිස්සම් කරගන්න.
🛑குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” என இம் மாதம் 09 ஆம் திகதி (09.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த வீடியோவின் கீழ் பதியப்பட்டிருந்த கமெண்டுக்களை நாம் பார்வையிட்டோம். அதில் இது இலங்கையில் நடந்தது போன்று மக்கள் அச்சத்தில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.


குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இந்த வீடியோவில் மூச்சுத்திணறலில் இருந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு தாதியும் குறித்த குழந்தையின் தாயாக கருதக்கூடிய ஒரு பெண்ணும் அருகில் உள்ளனர்.
மேலும், நாம் அதனை ஆய்வு செய்த போது, குறித்த குழந்தையின் தாய் என கருதப்படுகின்ற பெண் குழந்தையினை பார்த்து “மகே மேனிக்க” அதாவது எனது மாணிக்கம் என அழைக்கின்றார். மேலும் வீடியோவில் இறுதியில் குறித்த தாதி உதவிக்கு இன்னொரு தாதியை மலையாளத்தில் அழைக்கும் குரல் பதிவும் அடங்கியிருந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய இது இலங்கை நாட்டில் அமைந்துள்ள வைத்தியசாலையாக இருக்கு முடியாது என தெளிவாக தெரிகின்றது.
இலங்கையில் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் இலங்கை அரசாங்க வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த குழந்தையில் கரத்தில் தனியார் வைத்தியசாலையில் பயன்படுத்தப்படுகின்ற டேக் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.
மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர் மற்றும் தாதிமார்கள் அனைவரும் பாதுகாப்பு கவசம் அணிந்தவாறே சிகிச்சை அளித்து வருகின்ற நிலையில் குறித்த வீடியோவில் அவ்விதமான எந்த பாதுகாப்பு உடையும் தாதி அணிந்திருக்கவில்லை.
அத்துடன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்ற நோயாளி மட்டுமே சிகிச்சை வழங்கப்படுகின்ற வார்ட்டினுள் அனுமதிக்கப்படுகின்ற நிலையில், அவருடன் வருகின்ற யாருக்கும் அனுமதியளிக்க மாட்டாது. இதனால் குறித்த வீடியோவில் உள்ள குழந்தை கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இல்லை என உறுதியாகின்றது.
எவ்வாறாயினும், குறித்த வீடியோவை பார்வையிட்ட குழந்தைகளுக்கான வைத்தியர் ?who (name) குறித்த வீடியோவில் உள்ள குழந்தையின் சத்ததைக்கொண்டு, இது கால்-கை வலிப்பு (seizure, epilepsy) மூளையில் கட்டி அல்லது மூளை நோய்த்தொற்று போன்ற எந்தவொரு காய்ச்சல் அல்லது வலிப்புத்தாக்கங்கள் போன்ற மூளைக்கு இரத்த வழங்கல் குறைவதால் ஏற்படலாம் என தெரிவித்தார்.
அந்த சூழ்நிலையில் இருந்த ஒரு குழந்தையின் நடத்தை காட்டும் வீடியோ கீழே உள்ளது.
வீடியோவில் உள்ள காட்சிகள் இலங்கையிலிருந்து வந்தவை அல்ல, குவைத்தில் வசிக்கும் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவை என்று பலர் பதிலளித்திருந்தனர். ஆகவே நாம் ஃபேக்ட் சீக்கர் (mention name in English) விசாரணைக் குழுவின் உதவியுடன், குவைத்தில் வசிக்கும் சிறுமியின் தந்தையை நாங்கள் தொடர்பு கொள்ள முடிந்தது.
தனது இரண்டரை வயது மகள் உடல்நிலை சரியில்லாமல் மே 4 ஆம் திகதி குவைத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தாதியர்கள் மட்டுமே இருந்ததாகவும், சிறுமியின் நிலையை வைத்தியரிடம் காண்பிக்கும் நோக்கத்துடன் அந்த வீடியோவை தானே பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்கண்ட வீடியோ குவைத்தில் உள்ள தாண் பணியாற்றும் பணியிடத்திற்கு அனுப்பப்பட்டு, குழந்தையின் உடல்நிலையை தெரிவித்து வேலைக்கு விடுமுறை விண்ணப்பித்ததாக தெரிவித்தார். அந்த வீடியோ அவரது அனுமதியின்றி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்த உடையில் சிறுமியுடன் எடுத்த மற்ற புகைப்படங்களை எமக்கு அக்குழந்தையின் தந்தை அனுப்பிவைத்தார். நாம் அவற்றை ஒப்பிட்டு தகவல்களை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால், சிறுமியின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அவளுடைய பெயரையோ அந்த புகைப்படங்களையோ இங்கு காண்பிக்கவில்லை.
சிறுமி ஏற்கனவே குவைத்தின் ஜாபரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தந்தை எங்களிடம் கூறினார். வைத்தியசாலையின் ஊழியர்களில் பெரும்பாலோர் மலையாள மொழி பேசுபவர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், என்று சிறுமியின் தந்தையும் உறுதிப்படுத்தினார். கேரளாவில் இருந்து ஏராளமான செவிலியர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தாதி வேலை நிமிர்த்தமாக பயணிப்பதாகவும் எங்கள் மலையாள பிரிவு தெரிவித்துள்ளது.
மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி தவறான பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று குழந்தையின் தந்தை மேலும் தெரிவித்தார்.
இது குறித்து எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல்நிலை மோசமானதா?
Fact Check By: Nelson ManiResult: False