INTRO :
சூடான் நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற பதிப்புடன் ஒரு வயதுபோன நபர் மணல் தரையில் இருக்கும் இரு புகைப்படங்களை இணைத்து ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Mhmanvar Mhmanvar என்ற பேஸ்புக் கணக்கில் ” ✍🏽இவர் #சூடான் #நாட்டு #பாதுகாப்பு #அமைச்சராக #இருந்தவர்... அல்லாஹ் நாடினால் சொட்ப நேரம் நம் வாழ்க்கையை மாற்றுவதுக்கு...

✅#அல்லாஹ் மிகப் பெரியவன்

படைத்தவனை தவிர எவரிடமும் #அஞ்சியும் வாழாதீர்கள் #கெஞ்சியும் #வாழாதீர்கள்!!

✅அல்லாஹ் நமக்கு போதுமானவன் மேலும்

பொறுப்பேர்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்

[அல்குர்ஆன்: 3 :173]

யா ரஹ்மானே எங்களை பாதுகாத்துடு....” என இம் மாதம் 04 ஆம் திகதி (04.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இணையத்தில் பதியப்பட்டிருந்த புகைப்படத்தொகுப்பில் இராணுவ சீருடையில் உள்ளவரின் புகைப்படத்தினை மட்டும் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த ஆய்வின் போது, இவர் சூடானின் இராணுவ அரசியல் குழுவின் தலைவரான ஜெனரல் உமர் ஜெய்ன் அல்-அபிடின் என தெரியவந்தது.

BBC link | Archived Link

மேலும் 2019 ஆம் சூடான் இராணுவம் ஆட்சியினை கைப்பற்றியதன் பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் கண்டறியப்பட்டது.

மண் தரையில் இருந்த வயோதிபரின் புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி நாம் ஆய்வு செய்த போது, பிபிசி ஊடகவியலாளரான Roncliffe Odit என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கென்னியாவில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

Archive

மேலும் அவரின் டுவிட்டர் பக்கத்தினை நாம் ஆய்வு செய்த போது, 2019 ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சியில் கென்னியாவில் நிகழும் உணவு பற்றாக்குறை தொடர்பாக வெளியான செய்தியின் வீடியோவினை அவர் பகிர்ந்திருந்தமை காணக்கிடைத்தது.

அதில் இணையத்தில் சூடானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள வயோதிகரும் குறித்த வீடியோவில் உள்ளமை எம்மால் காணக்கிடைத்தது.

https://twitter.com/RoncliffeOdit/status/1108566831219048449

நாம் மேற்கொண்ட தேடலிலுக்கு அமைய இவர் சூடான் நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்தவரின் தற்போதைய நிலை என பகிரப்படும் புகைப்படம் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:இவர் சூடான் நாட்டு பாதுகாப்பு அமைச்சரா?

Fact Check By: Nelson Mani

Result: False