INTRO :
உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

புலனாய்வு என்ற பேஸ்புக் கணக்கில் “ உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம். (படங்கள் இணைப்பு)

(07.07.2010) அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன. ” என இம் மாதம் 09 ஆம் திகதி (09.06.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

குறித்த புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, இது போலியாக வடிவமைக்கப்பட்ட உருவங்கள் என கண்டறியப்பட்டது.

Juan Caban என்ற நபரினால் குறித்த உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

designyoutrust.com| Archived Link

மேலும் இது குறித்து ஆய்வினை மேற்கொண்ட போது, Juan Cabana என்ற பெயரில் இயங்கும் இணையத்தளம் எமக்கு காணக்கிடைத்தது. அதில்

Juan Cabana வடிவமைக்கப்பட்ட அனைத்து விதமான கடற்கன்னிகள் காணப்பட்டன.

இவர் இதனை உருவாக்க மீன்களின் தோல்,செதில் மற்றும் பற்கள் என பல உயிரினங்களில் பாகங்களை பயன்படுத்தி உண்மையான கடற்கன்னி போன்று வடிவமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

juancabana.com| Archived Link

juancabana.com | Archived Link

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் என பகிரப்படும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படமா இது?

Fact Check By: Nelson Mani

Result: False