
‘விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பல் என்று 9 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத் தொகுப்பு பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

மலையகம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தீயில் இருந்து மீட்கப்பட்ட கப்பலிலிருந்து சில புகைப்படங்கள்
நேற்று தீ பற்றிய கப்பலை காப்பாற்றுவதற்காகவும் இலங்கை கடற்படையினர் விடா முயற்சியினாலும் இந்த தீயணைப்பு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது…” என்று நேற்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக அதில் முதலில் காணப்பட்ட எண்ணெய் கசிவுடன் உள்ள கப்பலின் புகைப்படத்தினை google reverse Image tool பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்தினோம்.

குறித்த தேடுதலின் போது, அந்த புகைப்படமானது மொரீஷியஸ் நாட்டில் விபத்திற்குள்ளான MV Wakashio என்ற கப்பலின் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பான செய்தியுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
அதை போன்று நாம் அதிலிருந்த புகைப்படங்களை ஆய்விற்கு உட்படுத்தியபோது ஒரு புகைப்படத்தினை தவிர்த்து அனைத்து மொரீஷியஸ் நாட்டில் விபத்திற்குள்ளான கப்பலின் புகைப்படங்கள் என்பது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனங்களில் வெளியான செய்தி கீழ் காணப்படுகின்றது.
குறித்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படம் மட்டுமே இலங்கையில் நேற்று முன் தினம் விபத்திற்குள்ளான எண்ணெய் கப்பலுடன் தொடர்புடையது என்பது எமது ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினால் எடுக்கப்பட்ட இலங்கையில் விபத்திற்குள்ளான MT – New Diamond எண்ணெய் கப்பல் சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பல் முழுவதுமாக கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கையில் தீ பற்றிய எண்ணெய் கப்பலின் புகைப்படங்கள் என பகிரப்படுகின்ற புகைப்படங்களில் சில மொரீஷியஸ் நாட்டில் இடம்பெற்ற எண்ணெய் கப்பல் விபத்துடன் தொடர்புடையதாகும்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:இலங்கையில் தீ பற்றிய எண்ணெய் கப்பலின் புகைப்படங்களா இவை?
Fact Check By: Nelson ManiResult: False