
ஜுன் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Dr.Muttiah Kathiravetpillai Muruganandan என்ற பேஸ்புக் கணக்கில் ” நேற்று நடந்த சூரிய கிரகணம்
Shared by K.Ketheeswaran
” என்று ஜுன் மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த வீடியோவில் இருந்த நபரின் புகைப்படத்தினை screenshot எடுத்து நாம் Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையின் போது, Veritasium என்ற அவரது யுடியூப் அலைவரிசை எமக்கு காணக்கிடைத்தது.
அதை நாம் ஆய்விற்கு உட்படுத்தியவேளையில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஐக்கிய ராஜியத்தின் Madras, Oregon என்ற இடத்தில் சூரியகிரணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காணப்பட்டது.
குறித்த வீடியோவும் தற்போது பேஸ்புக்கில் இம்மாதம் ஏற்பட்ட சூரியகிரணம் என பகிரப்படும் வீடியோவும் ஒன்றாகும்.
இதற்கமைய இந்த வீடியோ 2017 ஆம் சூரியகிரணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்படுகிறது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இம்மாதம் ஏற்பட்ட சூரியகிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என பகிரப்படும் வீடியோ 2017 ஆம் ஆண்டு சூரியகிரணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்படுகிறது.

Title:ஜூன் மாதம் சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இதுவா?
Fact Check By: Nelson ManiResult: False