INTRO :

புரவி சூறாவளி இலங்கையை அண்மித்துள்ள நிலையில் திருகோணமலையில் பதிவான காட்சி என ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

SK TV 1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” SKTV1StNews திருகோணமலையில் பதிவான காட்சி! #Video_Updates_Burevi_Lk

SKTV1St Breaking News திருகோணமலையில் பதிவான காட்சி!

#Video_Updates_Burevi_Lk 02.12.2020

காட்சி.இதுவரைபார்த்திருக்கமாட்டீர்கள்.அருமைன விடியோ பர்க்கா மரக்கதிங்கபதிவுகளை பெற SK TV1St பக்கத்தை 👍 Like&+Followபண்ணுக..!” என இம் மாதம் 02 ஆம் திகதி (02.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற வீடியோவை வை Screenshot எடுத்து நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

அத்தேடலின் போது, குறித்த வீடியோவானது 2016 ஆம் ஆண்டு இலங்கையில் சூறாவளியின் தாக்கத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.

முதலில் குறித்த வீடியோவினை பதிவிட்ட Almashoora Breaking News என்ற பேஸ்புக் பக்கம் குறித்த வீடியோவையும் நீக்கியுள்ளதுடன் அதற்காக மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்த பதிவையும் தற்போது நீக்கியுள்ளது.

ஆவணப்படுத்தலுக்கு எடுத்து வைக்கப்பட்ட Screenshot இணைத்துள்ளோம்.

நாம் மேற்கொண்ட தேடலில் பழைய வீடியோவினை எடுத்து புதியது போன்று தற்போது இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:திருகோணமலையில் பதிவான காட்சியா இது?

Fact Check By: Nelson Mani

Result: False