வியாழேந்திரன் 25,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்தாரா?

False இலங்கை | Sri Lanka

INTRO :

தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி ,பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக திரு.சதாசிவம் வியாழேந்திரன் 25000 ரூபா பணம் வாங்கி வேலை தருவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Sasi Kamalan  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” வியாழேந்திரன் 25,000 ரூபா காசு வாங்கி விட்டு தான் வேலை கொடுத்திருக்கிறார் என்பதற்கு முதலாவது ஆதாரம் இது. 

என்ன பொழைப்புடா இதெல்லாம்.”  என கடந்த மாதம் 21 ஆம் திகதி  (21.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்ற வீடியோ தொடர்பாக இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரனின் செயலாளரை தொடர்புக்கொண்டு வினவிய போது, இது அரசியல் பழிவாங்கல் நிமிர்த்தமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறித்த வீடியோவில் நடித்த நபரை கைது செய்துள்ளதாகவும் அவர் தமது குற்றித்தினை ஒப்புக்கொண்டுள்ளதுடன் இவ்வாறு குறித்த நபரினை நடிக்க தூண்டிய நபரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இயங்கி வருகின்ற தனியார் நிறுவனமாகிய சக்தி டீவியில் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வியாழேந்திரன் குறித்த தகவலை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியினை மறுத்துள்ளார்.


குறித்த நிகழ்ச்சியின் போது ஊடகவியலாளர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பிற்கு கையூட்டல் பெறப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வியாழேந்திரன் இருளில் எடுக்கப்பட்ட வீடியோ தொடர்பாக வாஹர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது சில அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என தமது கருத்தினை அவர் பதிவேற்றியிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பப்‌ பத்திரங்கள் பிரதேச செயலாளர்‌ அலுவலகங்களிலே வழங்கப்பட்டது.

thinakaran.lk | Archived Link

நாம் மேற்கொண்ட தேடலில் வியாழேந்திரன் 25,000 ரூபா பணம் வாங்கி தான் வேலை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:வியாழேந்திரன் 25,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டு வேலை கொடுத்தாரா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *