
ஆந்திர மாநிலத்தில் தனது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு மரணித்த தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து வைத்து நிகழ்வினை நடத்திய கணவர் என சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
Jaffna Jet என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச்_சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர்.
இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார்.
தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகுச் சிலையாக வடித்து விழா நடத்தி உள்ளார்.
நல்வாழ்த்துக்கள்…..” என்று இம்மாதம் 10 ஆம் திகதி (10.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்டோம்.
குறித்த தேடுதலின் போது பேஸ்புக்கில் பகிரப்படும் சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றிருந்தமை கண்டறியப்பட்டது.
மேலும் நாம் இது குறித்த ஆய்வினை மேற்கொண்டவேளையில், குறித்த பெண் 2017 ஆம் ஆண்டே மரணித்துள்ளமை கண்டறியப்பட்டது.
#Karnataka: Industrialist Shrinivas Gupta, celebrated house warming function of his new house in Koppal with his wife Madhavi’s silicon wax statue, who died in a car accident in July 2017.
— ANI (@ANI) August 11, 2020
Statue was built inside Madhavi’s dream house with the help of architect Ranghannanavar pic.twitter.com/YYjwmmDUtc
கர்நாடாகவில் நடந்த நிகழ்வு தொடர்பாக இணையத்தளங்களில் வெளியான செய்தி
இது குறித்து எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எமக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கையில் பேஸ்புக்கில் பகிரப்படும் தகவலில் குறித்த மெழுகு சிலை ஆந்திர மாநிலத்தில் செய்யப்பட்டதாகவும் அவரது மனைவி 10 வருடங்களுக்கு முன் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஆந்திராவில் மனைவியின் நினைவாக மெழுகு சிலை வடித்தாரா கணவன்?
Fact Check By: Nelson ManiResult: Partly False