
14 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை, தாய் இறந்து விடுகிறாள் இதை தாங்காத வைத்தியர் கண்ணீரோடு அமர்ந்துள்ளதாக ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
East Times1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” 14 வருடங்கள் கழித்து முதன் முதலாக ஒரு குழந்தைப் பிறக்கிறது, ஆனால் அந்தக் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டிய தாய் பிரசவிக்கும் போது இறந்து விடுகிறாள்,
இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத டாக்டர் கண்ணீரோடு அமர்ந்து இருக்கிறார்.
இந்தப் போராட்ட உலகத்தில்
நீ பெரியவன், நான் பெரியவன் எனச் சண்டைகளும், சச்சரவுகளும் அதிகம் இருக்கின்றன இந்தப் புகைப்படத்தைப் பார்த்து சற்று சிந்திக்கவும்…
என்னைப் பொறுத்தவரை சிறுவயதிலேயே நமக்கு உயிர் கொடுத்த அன்னையை இழப்பது மட்டும் தான் மிகவும் கொடுமையானது. ” என்று இம்மாதம்16 ஆம் திகதி (16.09.2020) அன்று பதிவேற்றம் செய்துள்ளனர்.
குறித்த தகவல் பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம்.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
பகிரப்பட்ட குழந்தை தாயின் முகத்திற்கு அண்மையில் உள்ள அனைத்து புகைப்படங்களிலும் மேலே ஒரு watermark பதியப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
மேலும் அது தெளிவின்மையாக காணப்பட்டாலும் நாம் மேற்கொண்டு ஆய்வில் குறித்த புகைப்படத்தில் பதியப்பட்டிருந்த watermark இனை அடையாளம் கண்டு கொண்டோம்.
துருக்கி நாட்டை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞரின் watermark அது என கண்டறியப்பட்டது.
அதற்கு அமைய அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திற்கு சென்று மேற்கொண்ட ஆய்வில் 14 ஆம் திகதி டிசம்பர் மாதம் 2015 ஆம் திகதி (14.12.2015) குறித்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் துருக்கி மொழியில் பதியப்பட்டிருந்த வசனத்தை தமிழில் மொழிபெயர்த்த போது, மிக அழகான மறு இணைவு என அர்த்தம் பெறப்பட்டது.
குறித்த பதிவேற்றத்தில் அவர் பதிவு செய்திருந்த hashtags ஐ நாம் அவதானித்தோம். அதில் #birthphotographer #newbornphotographer என்ற வசனங்கள் பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.
மேலும் அவரின் இந்த பக்கத்தினை நாம் ஆராய்ந்த வேளையில் இவர் குழந்தை பிறப்பினை புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞர் என்பது உறுதியானது.
அதில் வைத்தியர் அழுகின்ற புகைப்படம் என பகிரப்பட்ட புகைப்படத்தினை நாம் ஆய்வு செய்த வேளையில் அது 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி (05.09.2017)
என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் அவர் தந்தையானார் என பதிவிட்டுள்ளார்.
இதற்கமைய இரு வேறுப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை இணைத்து ஒரு கட்டுக்கதையினை உருவாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:14 வருடங்கள் கழித்து குழந்தை பிறப்பு, தாய் உயிரிழப்பு; இதை தாங்கா வைத்தியர் அழுகிறாரா?
Fact Check By: Nelson ManiResult: False