INTRO :
பன்றியின் ஜெலடின் பயன்படுத்தி தயாரிக்கப்படும் யோகட் பானம் என ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

I am Proud To Be A Muslim என்ற பேஸ்புக் கணக்கில் ” பன்றியின் எலும்பில் இருந்து தயாரிக்கப்பட்டது இந்த Gelatine E-441 இலங்கை சந்தையில் விற்பனையாகும் யோகட் பானம் முஸ்லிங்கள் அதிகமாக அருந்துகின்றாகள் .

ஆனால் அதில் முஸ்லிங்கள் உண்ணுவதற்கு தடை செய்யப்பட்டுள்ள பன்றியின் எலும்பில் இருந்து தயாரிக்கபடும் இந்த கொழுப்பு Gelatine E-441 கலக்கபடுள்ளது என்று முஸ்லின்களுக்கு தெரியாது, அந்த போத்தலில் பதியப்படுல்லத்தை யாரும் பார்ப்பதில்லை.

ஹராத்தை உண்ட எந்த உடம்பும் சுவர்க்கம் நுழையாது என்பது நபி மொழி இலங்கையில் விற்பனையாகும் திரிங்கிங் யோக்கட் dringking yorghut வகைகள் அத்தனையிலும் இந்த பன்றியின் கொழுப்பு கலக்கப்டுள்ளது என்பதை முஸ்லிங்கள் மறந்து விட்டார்கள் இலங்கையில் தயாரிக்கப்படுகின்றன இந்த யோக்கட் தயாரிப்பாளர்கள் அதில் ஜெலட்டின் Gelatine E-441 என்று குறித்துள்ள இலக்கத்தின் அடையாளத்தின் என்ன இருக்கின்றது என்று கூகுளில் உலாவி பார்த்தேன்.

அது முஸ்லிம்களும், யூதர்களின் மத நம்பிக்கை உள்ளவர்களும் உண்ணுவதற்கு தடுக்கப்பட்ட மிருகத்தின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவு என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது .

இஸ்லாமிய மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட பன்றியின் எலும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஜெலட்டின் என்ற ஒரு வகை கொழுப்பிலிருந்து வேதிப்பொருளை எடுத்து சேர்க்கப்பட்டுள்ள.

இந்த பானத்தை அருந்துவது நல்லதில்லை. இதை Gelatine E-441 சேர்க்கப்பட்டிருபத்தின் நோக்கம் உருசி மற்றும் இது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இதை சேர்த்துக் கொள்கின்றனர்.

பௌத்தமதம் இறைச்சி வகைகளை தடுத்தாலும் அவர்களுக்கு இது பெரிய ஒரு பிரச்சினையாக தெரிவதில்லை , ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இது தடை செய்யப்பட்ட மிருகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உணவாகும் எனவே முஸ்லிம்கள் தனது குழந்தைகளுக்கு உறவினர்களுக்கு இவற்றை வாங்கி கொடுக்கும் பொழுது கண்டிப்பாக இதை தவிந்து கொள்ள வேண்டும்.

உலமாக்கள் சபை மக்களுக்கு இது பற்றி சரியான வழிகாட்டல் ,புரிந்துனவுகள் விளிபுனர்வுகள் செய்யவேண்டும்.

இலங்கை முஸ்லிங்கள் இந்த யோகட்டை இதுவரை பாவித்துக்கொண்டு தான் இருகின்றார்கள் அல்லாஹ் எங்களை ஹரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.” என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி (30.12.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த தகவலானது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில், Gelatine E-441 எதனால் தயாரிக்கப்படுகின்றது என தேடுதல் மேற்கொண்டோம். இதன் போது அது விலங்கு எலும்புகள் கொண்டு தயாரிக்கப்படும் என food-info.net என்ற இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இது அனைத்து விதமான விலங்கு இனங்களினால் தயாரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

food-info.net| Archived Link

இலங்கையில் அமைந்துள்ள Halal Accreditation Council – HAC நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதில் அவர்களின் ஹலால் அனுமதி பெற்ற நிறுவனம் என தெரிவித்துள்ளனர்.


facebook.com| Archived Link

குறித்த நிறுவனமே அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் E441 என்ற ஜெலடீன் தொடர்பாக பதிவினை பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

facebook.com| Archived Link

எமது தேடலுக்கு அமைய, பன்றியின் ஜெலடின் கலந்துள்ள யோகட் பானம் என பகிரப்பட்டுள்ள தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பன்றியின் ஜெலடின் கலந்துள்ள யோகட் பானமா இது?

Fact Check By: Nelson Mani

Result: False