
INTRO :
இலங்கையில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக செய்தி ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Lankapuri என்ற பேஸ்புக் கணக்கில் ” இலங்கை வாழ் மக்களுக்கு சற்று முன்னர் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை..எந்த வேளையிலும் ஊரடங்கு அமுலாகும் சாத்தியம்.!!
நாட்டின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
எனவே சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு சற்றுமுன்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 69 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.” என்று நேற்று (05.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
எமது குழுவினர் ஜனாதிபதி ஊடகப்பிரிவினை தொடர்புகொண்டு வினவியபோது, இன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ள செய்தி தொடர்பில் வெளியான செய்தி போலியானவை என தெரிவித்தனர்.
සමාජ මාධ්ය ඔස්සේ හුවමාරුවන සාවද්ය ප්රචාරවලට නොරැවටෙන්න…#PMDNews pic.twitter.com/SVX9013SfN
— PMD News (@PMDNewsGov) October 5, 2020
மேலும் அததெரண இணையதளத்தின் பெயரில் வெளியான செய்தி என ஊடரங்கு சட்டம் குறித்து பகிரப்படும் தகவல் போலியானது என்று அதரெண இணையத்தளம் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாட்டை முடக்குவதில்லை என்று இலங்கை இராணுவ தளபதி அத தெரண தொலைக்காட்சிக்கு கொடுத்திருந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.
இதுவரையில் இலங்கையில் ஊரடங்கு சட்டம் திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் அமுலில் உள்ள நிலையில் இன்று (06.10.2020) மாலை 6 மணி முதல் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது சிங்கள பிரிவினரின் ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தவுள்ளதாக வெளியான செய்தி தற்போதுவரை (06.10.2020) அமுலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு; உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: False