
INTRO :
ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இந்தியாவின் கேரளவை சேர்ந்த தாதியின் பெயரை இஸ்ரேல் போர் விமானத்திற்கு இட்டுள்ளதாக ஒரு செய்தி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Sakthi Vel என்ற பேஸ்புக் கணக்கில் ” #பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் இஸ்ரேலில் பலியான!
#கேரளாவை சேர்ந்த சௌமியாவின் பெயரை போர் விமானத்திற்கு சூட்டிய இஸ்ரேல்!👍” என இம் மாதம் 16 ஆம் திகதி (16.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை காரணமாக இரு தரப்பினரும் ஏவுகணைகள், போர் விமானங்கள் பயன்படுத்தி தாக்குதல் நடத்திக் கொள்கின்றனர்.
இதில், இஸ்ரேலில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த தாதியான சவுமியா என்பவர், ஹமாஸ் அமைப்பினர் நிகழ்த்திய ராக்கெட் தாக்குதலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலம் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தின் பின்னர் இணையத்தளத்தில் சௌமியா பெயரில் இஸ்ரேல் நாடு புதிய போர் விமானம் ஒன்றை தயாரித்துவிட்டதாகக்கூறி ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
அப்புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, அது சீன ராணுவத்திற்குச் சொந்தமான போர் விமானம் என கண்டறியப்பட்டது.

Gushiciku.cn Link I Archived Link
அதன் புகைப்படத்தை எடுத்து அதில் SOUMYA என எடிட் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய சீனப் போர் விமானத்தின் புகைப்படத்தை எடுத்து, சௌமியா என்ற பெயரை அதில் சேர்த்து, இணையத்தில் பரப்பியுள்ளமை என கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கேரளாவை சேர்ந்த சௌமியாவின் பெயரை போர் விமானத்திற்கு சூட்டியதா இஸ்ரேல்?
Fact Check By: Nelson ManiResult: Altered