இஞ்சி இடுப்பழகி பாடலை இத்தாலி மக்கள் பாடினார்களா?

Coronavirus False சர்வதேசம் | International

இவ்வருடம் தொடக்கம் முதலே கொரோனா வைரஸ் தான் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில்  வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் இளையராஜாவின் பாடலை பாடி பொழுது போக்குவதாக ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Instagram Link | Archived Link 

suganya_minnalfm_malaysia என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்” The whole neighborhood in Italy is singing “inji iduppazhagi” while they are lock down and self quarantined

#covid19

@kamalhaasanourpride @we_speak_kamalism

@ikamalhaasan” என்று கடந்த மாதம் 23 ஆம் திகதி (23.03.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Facebook link | Archived Link 

குறியீடு – www.kuriyeedu.com  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இத்தாலியில் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள், தங்கள் வீட்டின் பால்கனியில் இருந்தவாறு தமிழ் பாடலான ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலை பாடும் வீடியோ ” என்று கடந்த மாதம் 17 ஆம் திகதி (17.03.2020) பதிவேற்றம் செய்திருந்தனர்.

குறித்த வீடியோவை பலரும் பல்வேறு இசை கலைஞர்களின் பெயரினை குறிப்பிட்டு அவர்களின் பாடல் பாடியதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யதிருந்தமையும் காணக்கிடைத்தது.

இது டுவிட்டர் கணக்குகளிலும் பகிரப்பட்டுள்ளமையும் எமக்கு காணக்கிடைத்தது.

Twitter link | Archived Link

Fact Check (உண்மை அறிவோம்) 

இதுதொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்திருந்த வீடியோவிலிருந்து screenshot எடுத்த புகைப்படத்தினை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

குறித்த ஆய்வின் போது இத்தாலி மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு கொரோனா வைரஸிற்கு எதிராக பணியாற்றி வரும் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை புகழ்ந்து பாடி வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர். 

மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, news18 என்ற இணையத்தில் வெளியாகியிருந்த செய்தியில் குறித்த வீடியோ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த பதிவேற்றமும் காணக்கிடைத்தது.

News Link | Archived Link 

நாம் மேற்கொண்ட ஆய்விலிருந்து இத்தாலியில் மக்கள் தங்கள் வீட்டு பால்கனியில் நின்று மருத்துவர்களைப் புகழ்ந்து பாடும் வீடியோவை எடுத்து ஆடியோவை மட்டும் எடிட் செய்து வேறு ஒரு ஆடியோவை சேர்த்து வெளியிட்டுள்ளது உறுதியாகிறது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு +94771514696 தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இஞ்சி இடுப்பழகி பாடலை பாடிய இத்தாலி மக்கள் என்ற வீடியோ தவறானவை என்று சந்தேகமின்றி உறுதியாகிறது.

Avatar

Title:இஞ்சி இடுப்பழகி பாடலை இத்தாலி மக்கள் பாடினார்களா?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *