
யாழில் இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Sudar Seithy என்ற பேஸ்புக் பக்கத்தில் ” யாழில் பனைக்கு கீழ் கொத்து கொத்தாக இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ: வடிவா பாருங்கோ !” என்று கடந்த 9 ஆம் திகதி (09.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பாக, நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த வீடியோவில் இருந்து ஒரு screenshot எடுத்து அதை Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடிய போது குறித்த வீடியோ முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தேடுதலின் போது இந்த வீடியோவானது, How to Start ? என்ற யூடியுப் அலைவரிசையில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் குறித்த வீடியோவில் பேசப்படும் மொழி தமிழ் அல்லது என்பது அதை ஒழுங்காக செவிமெடுப்பதன் மூலம் கண்டறியலாம்.
குறித்த வீடியோவை திரும்பவும் இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலக்கட்டத்தில் பதிவேற்றம் செய்து மக்கள் வெளியில் நாடமாடுவதை போல சித்தரிக்க முயன்றுள்ளனர்.

இலங்கையில் கொரோனா காரணத்தினால் அனைத்து மதுபான சாலைகளும் தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Adaderana Link | Archived link
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் யாழில் இளைஞர்கள் கள்ளுக்கு கெஞ்சும் வீடியோ என இணையத்தில் பரவி வருகின்ற வீடியோ தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.