INTRO :
அமெரிக்காவில் இஸ்லாமியர்கள். கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மைக் டைசன் சென்று கடை முன்பு தொழுகை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Vidiyal என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்க நாட்டின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் வெளியே எழுதப்பட்டிருந்த வாசகம்.

"நாய்கள், முஸ்லிம்கள், மற்றும் கருப்பினத்தவர்கள், உள்ளே வர அனுமதியில்லை"

இதை கேள்விப்பட்ட அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தற்போதைய உலக குத்துச்சண்டை சாம்பியன் சுவிடிஷ் படு ஜேக் மற்றும் (இமாமாக தொழவைக்கும்) உலக கிக் பாக்ஸர் சாம்பியன் ஆமிர் அப்துல்லாஹ் ஆகியோர் அந்த கடைக்கு சென்று ஒலுச்செய்துவிட்டு நடுக்கடையில் முசல்லாவிரித்து ஜமாஅத் ஆக தொழும் காட்சி.

இதை கண்டு கடை நிர்வாகிகள் ஒடுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.” என இம் மாதம் 21 ஆம் திகதி (21.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

நாம் மைக் டைசனின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களை ஆய்வுசெய்தோம்.அவரது இன்ஸ்டெகிராம் பக்கத்தில் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற வீடியோவில் இருக்கு TR என்ற குறியீட்டினை கொண்ட ஓர் புகைப்படம் காணக்கிடைத்தது.

Instagram | Archived Link

நாம் TR Mike tyson என கூகுள் தேடு தளத்தில் தேடிய போது, TR என்பது Tyson Ranch என்ற ஓர் நிறுவனமாகும். குறித்த நிறுவனம் மைக் டைசனால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை எமக்கு கண்டறிய முடிந்தது.

இணையத்தில் பகிரப்படுவதை போன்று குறித்த இடம் ஊணவகமல்ல மாறாக இது மைக் டைசனினால் நிறுவப்பட்டுள்ள ஓர் குத்துச்சண்டை பயிற்சி நிறுவனம் என கண்டறியப்பட்டது.

நாம் குறித்த வீடியோ தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் போது, குத்துச்சண்டை வீரர் Badou Jack இன் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் குறித்த வீடியோவினை பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

அதில் இணையத்தில் பதியப்பட்டுள்ளவாறு எவ்விதமான கருத்துக்களும் பதியப்பட்டிருக்கவில்லை.

Instagram | Archived Link

இது குறித்து நாம் மேலும் தேடிய போது, தொழுகையை வழிநடத்திய அமர் அப்துல்லாவின் பேட்டி கிடைத்தது. மூன்று பேரும் இணைந்து தொழுகை நடத்தியதன் பின்னணி என்ன என்று அவர் விளக்கம் அளித்திருந்தமை காணக்கிடைத்தது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

குறித்த தகவலுக்கு மைக்டைசனின் குத்துச்சண்டை பயிற்சி அரங்கில் மைக் டைசன் உள்ளிட்டவர்கள் தொழுகை நடத்திய வீடியோவை எடுத்து, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியாகிறது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:கடையில் மைக் டைசன் தொழும் காட்சியா இது?

Fact Check By: Nelson Mani

Result: False