பீகாரில் பெற்ற தகப்பனை 1500km சைக்கிள் மிதித்தே கொரோனா ஊரடங்கில் அழைத்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை என்று ஒரு செய்தி புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Noorulhaq Nokhez என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொஞ்ச நாட்களுக்கு முன் தன் தகப்பனை 1500 Km தூரம் சைக்களில் கூட்டிவந்த பெண்

இவளை அதிசயமாய் பார்த்தோம்!

இன்று அலங்கோலமாய் பார்க்கமுடியலையே இறைவா

இவ்வளவு கேடுகெட்ட கேவலமானவர்களை

அழித்துவிடு இறைவா😢😢😢

July 5 : #பீகாரில் பெற்ற தகப்பனை 1500km சைக்கிள் மிதித்தே #கொரோனா ஊரடங்கால் அழைத்துவந்த 15 வயது சிறுமி -#பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள்!

இது என்ன நாடா - இல்லை சுடுகாடா?” என்று இம் மாதம் 5 ஆம் திகதி (05.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு தேடுதலில் ஈடுபட்டோம். குறித்த செய்தி தொடர்பில் பல நிறுவனங்கள் உண்மை தன்மையினை கண்டறிந்து அச்செய்தி போலியானது என செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

மேலும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ள சமீபத்தில் 1500 கிமீ தொலைவிற்கு, தனது தந்தையை ஏற்றிக் கொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்ற ஜோதி பாஸ்வான் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வதந்தி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, பல ஊடகங்களும் இதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட்டிருக்கின்றன.

TOI Link TheQuint Link

பேஸ்புக்கில் பகிரப்படும் புகைப்படத்தில் உள்ள 14 வயது சிறுமி, மாம்பழ தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் அதன் உரிமையாளரால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இதற்கமைய கொரோனா ஊரடங்கில் தகப்பனை 1500 கிமீ கூட்டி வந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை என பகிரப்படும் தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த செய்தி தொடர்பில் எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கொரோனா ஊரடங்கில் தகப்பனை 1500 கிமீ கூட்டி வந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை என பகிரப்படும் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:கொரோனா ஊரடங்கில் தகப்பனை 1500 கிமீ கூட்டி வந்த சிறுமி பாலியல் வன்புணர்வா ?

Fact Check By: Nelson Mani

Result: False