
கடந்த வாரம் தொடர்ந்த மழையினால் பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலமொன்று உடைந்ததாக புகைப்படத்துடன் செய்தி வெளியாகின.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News Link | News Archived Link
கிளிநொச்சி நெற் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்தது- பொதுமக்களுக்கு எச்சரிக்கை” என்று கடந்த 6 ஆம் திகதி (06.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு NewsVanni.com என்ற இணையத்தளத்தின் செய்தி லிங்கினையும் இணைத்திருந்தனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த பதிவேற்றத்தில் இருந்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்தினோம்.

குறித்த பரிசோதனையின் போது, கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்டூவர்ட் அதிவேக வீதியின் பாலம் உடைந்த வேளை எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.
பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் தொடர்பாக Newsfirst தமிழ் இணையத்தளத்தில் வெளியான செய்தி

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள பாலம் உடைந்ததாக வெளியான புகைப்படம் கடந்த 2011 ஆம் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெளிவாகிறது.