
நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளது என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:
RadioTamizha FM என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவின் புகழ் பெற்ற நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஒரு ஆய்வில் திருவள்ளுவர் தனது கைப்பட எழுதிய திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம். பனியில் புதைந்திருந்த இதை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது இதன் வயது மூன்றாயிரம் முதல் நான்காயிரம் என்று தெரியவந்ததில் அவர்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். இது வெளியே வந்தால் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்று நிரூபணமாகிவிடும் என்பதால் நாசா அதை அழித்துவிட முயற்சி செய்தது. அங்கே பணி புரியும் தமிழக விஞ்ஞானி ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அதைப் படம் எடுத்து நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப அது இங்கே வெளியாகியுள்ளது.
நாசா நிறுவனம் இந்த ஆதாரத்தை சர்வர்களில் இருந்து அழிக்கப் பார்க்கும் என்பதால் இதைக் கண்ட மறுவினாடியில் ஷேர் செய்து விடவும். இதன் மூலம் தமிழின் அரிய பொக்கிஷத்தை நாம் அழியாமல் பாதுகாக்க முடியும். நன்றி. ” என்று இம்மாதம் 2 ஆம் திகதி (02.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
KB Mohan என்ற பேஸ்புக் பக்கத்திலும் இது பகிரப்பட்டு இருந்தமை நமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த பதிவிலிருந்த கமெட்டுக்களை பரிசீலனை செய்து பார்த்தோம்,
அதில் பலர் இது போலியானது என பதிவிட்டுள்ளமை காணக்கிடைத்தது.
நாம் குறித்த பதிவிலிருந்த திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்ற புகைப்படத்தினை நன்றாக பார்வையிட்டால், அதில் தமிழ் எழுத்துக்கள் எழுத்து நடையிலுள்ள தமிழ் தட்டச்சு வடிவினை (Tamil Font) கொண்டு எழுதப்பட்டுள்ளதோடு, மேலும் அதன் அருகிலிருந்த குறளின் எண்ணிக்கை இலக்கம் ஆனது ஆங்கில எழுத்து வடிவிலுள்ள font ஐ பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளமை காணக்கிடைக்கின்றது.
நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, நாசா என்ற நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது யாவரும் அறிந்திருக்கும் உண்மையே, அவர்கள் அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவது நம்பகத்தன்மையினை உருவாக்குகிறது.
அதைபோல், திருக்குறள் ஓலைசுவடினிலே முதலாவதாக எழுதப்பட்டுள்ளதோடு, குறித்த ஓலை சுவடிகளை கொண்டே 1812 இல் முதன்முதலாக திருக்குறள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் அறிய
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் எமது ஃபேக்ட் கிரஸண்டோ இந்திய தமிழ் பிரிவினர் இது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வினை படிக்க இங்கே கிளிக் செய்க
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், நாசா அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் கிடைத்தது என கூறப்படும் புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Title:நாசா அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் கிடைத்ததா?
Fact Check By: Nelson ManiResult: False