
INTRO :
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

ஹரி TV என்ற பேஸ்புக் கணக்கில் ” சிறையில் தற்கொலைக்கு முயன்ற ரஞ்சன் ராமநாயக்க!
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நெருக்கமான உறுப்பினர்கள் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதற்கான விண்ணப்பம் இன்னமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சென்றடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் ரஞ்சன் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எஸ்.பீ.திஸாநாயக்க, சரத் பொன்சேகா போன்றோர் சிறைச்சாலை சென்ற போதிலும் அவர்கள் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகவில்லை. எனினும் ரஞ்சன் மனரீதியான பாதிப்புக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.” என இம் மாதம் 07 ஆம் திகதி (07.04.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இது போலியான தகவல் என பதியப்பட்டிருந்தமை, காணக்கிடைத்தது.

இது தொடர்பாக உண்மையினை கண்டறிவதற்கு நாம் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகப்பூர்வ ஊடக செய்தியாளரை தொடர்புகொண்டு வினவிய போது, ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயன்றார் என பரவும் செய்தி முற்றிலும் போலியானது என்று தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவினால் கையொப்பம் இடப்பட்ட ஒரு மன்னிப்பு கடிதம் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தினை அவமதிப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினரான ரஞசன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறைத்தண்டனை 4 வருடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாம் மேற்கொண்ட தேடலிலுக்கு அமைய சிறையில் தற்கொலைக்கு முயன்ற ரஞ்சன் ராமநாயக்க என பரவிய தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:சிறையில் தற்கொலைக்கு முயன்ற ரஞ்சன் ராமநாயக்க; உண்மை என்ன?
Fact Check By: Nelson ManiResult: Explainer