இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படம்- உண்மை என்ன?

இலங்கை செய்திகள்

இலங்கையில் அமைந்துள்ள ராவணன் கோட்டையில் அமைந்துள்ள பாரிய படிகள் என்றும் அதை கட்டியவனும், அதில் நடந்தவனும் எத்தனை பெரிதாய் இருந்திருப்பான் என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவுவதை நாம் அவதானித்தோம்.

குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 

Batti memes factory என்ற பேஸ்புக் பக்கத்தில் “இலங்கை ராவணன் கோட்டை தான்… ஆனா இந்த படி எங்க இருக்கு என்டு எனக்கே தெரியல….😲😲 ” என்று இம்மாம் 12 ஆம் திகதி (12.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள, முதலில் குறித்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி கூகுளில் தேடுதலினை மேற்கொண்டோம்.

குறித்த தேடலின் போது பெரு நாட்டில் Ollantaytambo-வில் காணப்படும் ஒரு இடம் என கண்டறியப்பட்டது.

மீண்டும் கூகுளில் Ollantaytambo என தேடுதலில் ஈடுபடுத்தப்பட்ட போது, 

குறித்த தேடுதலில் இராவணன் கோட்டையில் அமைந்துள்ள படிகள் என பகிரப்பட்ட புகைப்படமும் காணப்பட்டது.

மேலும், இது தொடர்பாக நாம் மேற்கொண்ட தேடுதலின் போது,

Ollantaytambo சரணாலயம் (Ollantaytambo Sanctuary) என குறித்த இடம் எமது தேடலின் மூலம் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து நாம் மேற்கொண்ட தேடுதலின் போது,

கஸ்கோ நகரிலிருந்து 94 கிலோமீட்டர் தொலைவில் குறித்த கட்டுமாணம் அமைந்துள்ளதாகவும், இது இன்கா கட்டிடக்கலை ஒரு நினைவுச்சின்ன வேலை ஆகும். 

மேலும் இது ஒரு இராணுவ, மத, நிர்வாக மற்றும் விவசாய வளாகமாக இருந்தது, முக்கிய கோயில் ஒன்று சிதைவடைந்து காணப்படுகின்றது.

குறித்த தகவல் BTC TOURIST TICKET OF CUSCO என்ற இணையத்தளத்தில் காணப்பட்டது.

குறித்த இணையத்தளம் அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்யும் தளம் ஆகும்.

இன்கா நாகரிகம்

இன்கா நாகரிகம் தென்னமெரிக்காவில் நிலவிய குறிப்பிடத்தக்க நாகரிகமாகும். வீழ்ச்சியடைந்த போது உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாக இன்கா பேரரசு விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். 

பெருவின் உயர்நிலப்பகுதிகளில் கி. பி. 1200 ஆம் ஆண்டளவில் இது தோன்றியது. 

போர்கள் மூலமும் சமாதான வழிமுறைகளாலும் மேற்குத் தென்னமெரிக்காவின் பெரும்பகுதியை, குறிப்பாக இன்றைய ஈக்குவடோர், பெரு, பொலிவியா, ஆர்ஜென்டீனா போன்றவற்றை உள்ளடக்கி இன்காப் பேரரசாக வளர்ந்தது.

1533 இல் Atahualpa என்ற கடைசி இன்காப் பேரரசர் கொலை செய்யப்பட்டதோடு ஸ்பானிய ஆட்சி தொடங்கியது. 1572 இல் கடைசி இன்கா ஆட்சியாளரும் கொல்லப்படதோடு இன்கா அரசு முழுமையாக இல்லாதொழிந்தது. முழு அறிக்கை

இன்கா பேரரசின் ஆட்சிக்காலத்தில் Ollantaytambo இல் உருவாக்கப்பட்ட அரண்மனைக்கு மேலே மிகப்பெரிய படிக்கட்டுகள் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதற்கு அருகிலேயே மனிதர்கள் எளிதாக மேலே செல்லும் வகையில் படிக்கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விக்கிப்பீடியா

பெரு நாட்டின் சுற்றுலாத் தளங்களில் மிக முக்கிய ஒன்றாக Ollantaytambo Ruins திகழ்ந்து வருகிறது. 

எமது இந்திய தமிழ் பிரிவிலும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதை வாசிக்க :

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், Ollantaytambo Ruins அமைந்துள்ள மிகப்பெரிய படிக்களை இலங்கையில் உள்ள இராவணன் கோட்டை என போலியாக பகிரப்பட்டு வருகின்றமை எமது ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Avatar

Title:இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படம்- உண்மை என்ன?

Fact Check By: Nelson Mani 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *