
மலேசியாவின் முதல் தமிழ் பெண் புகையிரத ஓட்டுனராக பொறுப்பேற்றார் என்று செய்தி பேஸ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம்.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Tamil என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றார்.. First female Railway driver in Malaysia is an Indian!” என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி (17.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள முதலில் குறித்த பேஜ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
குறித்த ஆய்வின் போது எமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்காமையினால், நாம் மீண்டும் கூகுளில் First female Railway driver in Malaysia என தேடுதலில் செய்தோம்.

2016 ஆம் ஆண்டு வணக்கம் மலேசியா என்ற இணையத்தளத்தின் யூடியுப் அலைவரிசையில் முதலாவது இந்திய பெண் ரயில்வே ஓட்டுனரின் பிரத்தியேக நேர்காணல் எமக்கு காணக்கிடைத்தது.
அதன் அடிப்படையில் இவர் 2016 ஆம் ஆண்டிலேயே புகையிரத பணியில் இணைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் நாம் மேற்கொண்ட சோதனையில் 2016 ஆம் ஆண்டு உமா தேவி முதலாவது இந்திய தமிழ் பெண் ரயில்வே ஓட்டுனராக மலேசியா ரயில்வே சேவையில் இணைந்தமைக்கு மும்பை ரயில்வே என்ற டுவிட்டர் பக்கத்திலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

நாம் மேற்கொண்ட சோதனையில் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் உமா தேவி முதலாவது இந்திய தமிழ் பெண் ரயில்வே ஓட்டுனராக மலேசியா ரயில்வே சேவையில் இணைந்தமை உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவருடைய பேஸ்புக் கணக்கில் மேற்கொண்ட சோதனையில் அவர் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரயில்வே ஓட்டுனராக மலேசியா ரயில்வே சேவையில் இணைந்தமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தகவலுக்கு அமைய கடந்த வருடம் (2019) நவம்பர் மாதம் தான் அவர் பொறுப்பேற்றார் போல் பதியப்பட்டுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக 2016 ஆம் ஆண்டு பொறுப்பேற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Title:மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றாரா?
Fact Check By: Nelson ManiResult:Partly False