
சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மக்களை கட்டிடத்திலேயே வைத்து தீ மூடியுள்ளதாக பேஸ்புக்கில் ஒரு வீடியோ ஒன்று பகிரப்படுகிறது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

S L M Media என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோன நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூடியுள்ளார்கள்.
இது போன்ற வீடியோக்களை காணவேண்டும் என்றால் எமது page follow வை கிளிக் செய்யுங்கள். மற்றா நண்பர்களுக்கு share செய்ய மறக்காதீர்கள். ” என்று இம்மாதம் 18 ஆம் திகதி (18.02.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவோடு ஒலி சேர்க்கை செய்யப்பட்ட ஒரு வீடியோ பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை குறித்த வீடியோவிருந்து எடுத்த Screenshot புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையில் இவ்வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி (01.01.2020) அன்று குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் மேற்கொள்ள தேடுதலில் இவ்வருட பிறப்பு நாளில் (01.01.2020) சீனாவில் யுபேய் மாவட்டத்தில் சோங்க்கிங் என்ற இடத்தில் அமைந்துள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாம் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் யுபேய் மாவட்டத்தில் சோங்க்கிங் என்ற இடத்தில் அமைந்துள்ள 32 அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற குறித்த தீ விபத்தானது சுமார் 3 மணிநேரம் தொடர்ந்ததாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த விபத்து ஏற்பட காரணமாக ஒரு சிகரெட் காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிகரெட்டை புகைத்த பின் அதை அணைக்க மறைந்தமையால் அதிலிருந்து தீ பற்றி ஏரிந்துள்ளமை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் பேஸ்புக்கில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூடியுள்ளார்கள் என்று தெரிவித்து பகிரப்படும் வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூடியுள்ளார்கள் எனக் கூறப்படும் வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

Title:கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூட்டினார்களா?
Fact Check By: Nelson ManiResult: False