
தமிழ் திரையுலகில் புகழ்பூத்த பாடகியான ஜானகி மரணித்ததாக, ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Jenaneetharan Jena என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Rip!
இந்தியாவின் புகழ் பூத்த பாடகி S. ஜானகி அவர்கள் இன்று காலமானார்.
28.06.2020
ஞானகி அம்மா!” என்று நேற்று (28.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்த எஸ்.ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா ஊடகங்களுக்கு கூறுகையில், தனது தாயார் உடல்நலத்துடன் இருப்பதாகவும். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News7Tamil link | Archived Link
மேலும், பாடகர் எஸ்.பி.பி ஜானகியை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது ஜானகி சிரித்து சந்தோஷமாக பேசியதாகவும், தான் உடல்நலத்துடன் உள்ளதாக அவர் எஸ்.பி.பியிடம் தெரிவித்ததாக ஒரு வீடியோவை தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதற்கமைய பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தொடர்பில் எமது இந்திய தமிழ் பிரிவின் மேற்கொண்ட செய்தியினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணித்ததாக பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.