INTRO :

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் “மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் “ என கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் இது பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் இது குறித்தான ஆய்வினை மேற்கொண்டபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள உலக சுகாதார ஸ்தாபகத்தின் உத்தியோகர் ஒருவர் AFP Philippine உண்மை சரிபார்க்கும் நிறுவனத்திற்கு குறித்த தகவல் போலியானது என உறுதி செய்துள்ளார்.


மேலும் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டவேளையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த icirnigeria என்ற உண்மை சரிபார்க்கும் நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் நைஜீரியா பிரிவை அணுகிய போது, " குறித்த தகவல் அடங்கிய தொகுப்பானது உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை " என மறுத்ததாக வெளியிட்டு இருக்கிறது.

1. காலை உணவை தவிர்ப்பது : தேசிய சுகாதார நிறுவனம்(NIH) வெளியிட்ட ஆய்வுகளின்படி, காலை உணவிற்கும், மூளை பாதிப்பிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லை. காலை உணவை தவிர்ப்பதால் பசியின்மையை வழிவகுக்கும். Link

2. தாமதமாக தூங்குவது : ஹார்வர்ட் ஆய்வின்படி, "மனிதனின் சரியான அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு தினமும் இரவில் 7-9 மணிநேரம் தூக்கம் தேவை. அதிக அளவில் அல்லது மிகக் குறைந்த அளவிலான தூக்கம் நினைவாற்றல் மற்றும் சிந்தனை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தூக்கமின்மை ஆனது மன அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது " எனக் கூறப்பட்டுள்ளது. Link

3. அதிகளவு சர்க்கரையை எடுத்துக் கொள்வது : உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, நமது உணவில் ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை தேவைப்படுகிறது. அதிக அளவிலான சர்க்கரை எடுத்துக் கொள்வது அறிவாற்றல் செயல்பாடு, இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றை குறைக்க வழிவகை செய்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. Link

4. அதிகநேரம் தூங்குவது, குறிப்பாக காலையில் : காலையில் தூங்குவதற்கும் மூளை பாதிக்கப்படுவதற்கும் நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும், பகல் நேர தூக்கத்தினால் இரவில் சரியான தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். இது ஒழுங்கற்ற தூக்க முறைகளுக்கு வழிவகுக்கும். Link

5. தொலைக்காட்சி அல்லது கணினியை பார்த்துக் கொண்டே உணவு உண்பது : ஹார்வர்ட் அறிக்கையின்படி, நாம் உணவு உண்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நன்றாக மென்று உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் உணவு இடையே எந்தத் தொடர்பையும் காணவில்லை. எனினும், டிவி மற்றும் கணினியை பார்த்துக் கொண்டே உணவு உண்ணும் போது உணவின் மீதான கவனம் சிதறுகிறது. Link

6. தூங்கும் போது தொப்பி /ஸ்கார்ஃப் அல்லது காலுறை அணிவது : பெரும்பாலான குளிமையான நாடுகளில் மக்கள் உடல் வெப்பநிலையை பேண தொப்பி மற்றும் காலுறை போன்றவற்றை அணிந்து கொண்டே தூங்குகிறார்கள். இதற்கும் மூளை பாதிப்பிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக எந்த ஆய்வுகளும் எமக்கு கிடைக்கவில்லை. Link

7. சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் : சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் சிறுநீர்ப்பை தசைகள் பலவீனமடையும். இதனால் சிறுநீர் பாதை தொற்று மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளே ஏற்படும். Link

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தகவல் வெளியிடப்பட்டதாக பரவிய தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok

இது தொடர்பாக எமது ஆங்கில பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டதா?

Written By: S G Prabu

Result: False