
INTRO :
உலகிலே தற்போது இலங்கை தான் மரண எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதாக ஒரு படவரைபு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் கணக்கில் “ 🚨#உலகிலேயே நாங்கள்தான் இப்பொழுது முதலிடம்‼‼‼.
மரண எண்ணிக்கை சனத்தொகைக்கு அதிகம்
உயிர்கள் மிகப் பெறுமதியானவை. அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்த்து எமது நாட்டைப் பாதுகாப்போம்.
அபரிவிதமாக அதிகரிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையின் சுகாதார துறையினைச் செயலிழக்கச் செய்யும்.
Thanks: Dr Vishnu Sivapatham “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இது Our World in Data என்ற இணையத்தளத்தில் John Hopkins பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கை என ஆரம்ப கட்ட ஆய்வில் எமக்கு தெரியவந்தது.
நாம் குறித்த Our World in Data என்ற இணையத்தளத்திற்கு சென்று ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது, சில குறிப்பிட்ட நாடுகளை மற்றும் நாம் தெரிவு செய்து அதன் அறிக்கைகளை காணக்கூடியவாறு குறித்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

இதில் குறிப்பிட்ட சில நாடுகளை மட்டும் தெரிவு செய்து இலங்கையினை கொரோனா மரணங்களில் முதலில் உள்ள நாடு என்று விபரிக்க கூடியவாறு, நாடுகளை தெரிவு செய்துள்ளமை எம்மால் காணக்கிடைத்தது. தெரிவு மேற்கொள்ளப்பட்டு நாடுகளின் அடிப்படையில் கொரோனா இறப்பு விகித அடிப்படையில் உலகிலேயே அதிக தினசரி கொரோனா இறப்பில் இலங்கை முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் தரவை பகுப்பாய்வு செய்ய எந்த நாடுகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைக் காட்டும் விளக்கப்படத்தின் இடது பக்கத்தில் ஒரு தெரிவு அட்டவணை இருப்பதை நீங்கள் காணலாம்.
நாம் அதில் இருந்த அறிக்கையின் அடிப்படையில் இறப்பு விகிதங்கள் அதிகம் காணப்படும் நாடுகளின் வரிசையில் பல நாடுகளை சேர்த்து வரைப்பினை நாம் பார்த்த போது, இலங்கை தற்போது 9 ஆவது இடத்தில் உள்ளமை எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ourworldindata.org | Archived Link
ஆகவே குறித்த வரைப்படத்தில் கஜகஸ்தான், போட்ஸ்வானா, பிஜி, கோஸ்டா ரிக்கா, மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இலங்கையினை விட முன்னிலையில் இம்மாதம் 16 ஆம் திகதி வரையான புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இறப்புக்களில் முதலில் காணப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 1 முதல் நேற்று வரை (ஆகஸ்ட் 16) தரவின் பகுப்பாய்வு ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையில் தினசரி இறப்பு விகிதம் வேகமாக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது, ஆகஸ்ட் 16 வரை, கொரோனா காரணமாக ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு புதிய இறப்பு எண்ணிக்கை 7.8 ஆக பதிவாகியுள்ளது. (7 day rolling average)

ourworldindata.org | Archived link
தெற்காசிய நாடுகள் என்ற அடிப்படையில் நாம் ஆய்வினை குறித்த இணையத்தில் மேற்கொண்ட போது, அதில் இலங்கை தான் முதல் இடத்தில் உள்ளமை கண்டறியப்பட்டது. பார்வையிட
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், உலகிலே கொரோனா மரணம் எண்ணிக்கையில் இலங்கை முதலிடம் என பகிரப்பட்ட தகவல் தவறானது என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.