
INTRO :
இலங்கையில் 10000 ரூபாய் நாணயத்தாள் அறிமுகம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Eravur News என்ற பேஸ்புக் கணக்கில் ” பத்து ஆயிரம் ஒரே தாளில் வந்திடுச்சி…
10000/= ரூபாய் நன்றி பர்ஹானா பதுர்டீன்” என இம் மாதம் 27 ஆம் திகதி (27.04.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
இணையத்தில் பதியப்பட்டிருந்த 10000 ரூபாய் நாணயத்தாள் பார்க்கும் வேளையில், அது தற்போது பயன்பாட்டில் உள்ள 20 ரூபாய் நாணயத்தாள் போன்று அமைந்துள்ளமை, எமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியது.
நாம் இணையத்தில் பகிரப்படும் 10000 ரூபாய் நாணயத்தாளையும் 20 ரூபாய் நாணயத்தாளையும் ஆய்வு செய்தோம்.

தற்போது பாவணையில் உள்ள 20 ரூபாய் நாணயத்தாளின் வர்ணத்தினை 10000 ரூபாய் நாணயத்தாளில் பயன்படுத்தி உள்ளனர்.
மேலும், பார்வையற்றவர்களுக்கு நாயணத்தாள்களை கண்டறிவதற்கு பயன்படும் சிறு புள்ளிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள 5000 தாளில் உள்ள 6 சிறு புள்ளிகளையே அது கொண்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் பயன்பாட்டில் உள்ள ஒவ்வொரு நாணயத்தாள்களின் பெறுமதிக்கு ஏற்ப, அதில் பயன்படுத்தப்படும் இலக்க குறியீடுகள் மாறுபடுகின்றது.
அதாவது, 20,50,100,500,1000 மற்றும் 5000 வரையான நாணயத்தாள்களில் முறையே ஆங்கில எழுத்துக்கள் W,V,U,T,S,R என்ற குறியீடுடன் இலக்கங்கள் பொறிக்கப்பட்டு நாணயத்தாள்கள் அச்சிடப்படுவது வழக்கம்.
அதில், 5000 நாணயத்தாளுக்கு பயன்படுத்தும் ஆங்கில எழுத்தான R இணையத்தில் பகிரப்படும் 10000 ரூபாய் நாணயத்தாளிலும் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நாணயத்தாள் 2021 ஆம் வருடம் அச்சிடப்படுள்ளதாக அதில் பொறிக்கப்படுள்ளது. தற்போது இலங்கை நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ச அவர்களே உள்ளார்.
அவரின் கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில் ரவி கருணாநாயக்க அவரின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த நாணயத் தாள்களும் குத்திகளும் | சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தாள்கள்
மேலும், நாம் இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தினை ஆய்வு செய்த போது, தற்போது இணைத்தில் பகிரப்பட்டு வருகின்ற 10000 ரூபாய் நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.
இணையத்தில் பகிரப்படும் 10000 ரூபாய் நாணயத்தாளில் பயன்படுத்தப்பட்டுள்ள இரு புகைப்படங்களும் பின்வரும் இணையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


நாம் மேற்கொண்ட தேடலிலுக்கு அமைய 10000 ரூபாய் நாணயத்தாள் என இணையத்தில் பகிரப்படும் தகவல் போலியானது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.