INTRO :

இலங்கையில் தற்போது ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினாரான சதாசிவம் வியாழேந்திரன் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச்செய்கை அபிவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக இம்மாதம் 6 ஆம் திகதி பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்களில் இவரை பற்றிய சில பதிவுகள் பகிரப்பட்டது. அதில் குருகந்த விகாரபதியின் மரண நிகழ்வில் பிரச்சினையினை ஏற்படுத்திய நபருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கியுள்ளது அரசாங்கம் என்பது பலராலும் பேசும் பொருளாகவே மாறியது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த செய்தி போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Venasaka Tharunyaye hada என்ற பேஸ்புக் பக்கத்தில் ” குருகந்த விகாரபதியின் மரண நிகழ்வில் பிரச்சனை செய்த வியாழேந்திரன் சிங்கள அரசாங்கத்தில் அமைச்சராக ” என இம்மாதம் 06 ஆம் திகதி (06.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

எமது குழுவினர் குருகந்த ரஜமகா விகாரையின் புதிய விகாரபதியினை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு வினவியபோது,மறைந்த குருகந்த விகாரபதியின் மரண சடங்கில் மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட சில குழப்பமான நிலைக்கு துரைராசா ரவிகரன் உட்பட தமிழ் தேசிய கூட்டணியின் பல உறுப்பினர்களே காரணம் என தெரிவித்தார்.

குருகந்த விகாரையானது முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சதாசீவம் வியாழேந்திரன் கடந்த வருடம் நடந்த குருகந்த விகாரையினை தொடர்புபடுத்தி இடம்பெற்ற எவ்விதமான மோதலுக்கும் சம்பந்தமில்லை எனவும் தெரிவித்தார்.

மறைந்த குருகந்த விகாரையின் விகாரபதியின் மரண சடங்கு மற்றும் அதன் பின்னர் இடம்பற்ற மத நிகழ்வுகளின் போது ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பாக இணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்தியினை நாம் ஆய்வுசெய்த போது குறித்த அனைத்து நிகழ்வுகளிலும் துரைராசா ரவிகரன் தொடர்பு பட்டிருந்தமை எம்மால் உறுதி செய்யப்பட்டது.

BBC Sinhala | Archived Lankadeepa | Archived

குருகந்த விகாரபதியின் மரண சடங்கிற்கு பின்னர் குருகந்த விகாரையில் கடந்த வருடம் (2019) ஒக்டோபர் மாதம் ஏற்பட்டிருந்த குழப்பநிலை தொடர்பாக இணையத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகளை நாம் ஆய்வு செய்த போது அதில் வெளியாகியிருந்த வீடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தவேளையில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான துரைராசா ரவிகரன் மற்றும் சிலர் தொடர்புப்பட்டிருந்தமை இவ்வாறு பதியப்பட்டிருந்தது.

Aruna | Archived Mawbima | Archived Lankadeepa | Archived

மேலும் இதுகுறித்தான தேடலில் ஈடுப்பட்ட எமது குழுவினர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான சதாசிவம் வியாழேந்திரனின் அரசியல் பயணம் தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்ட வேளையில், 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷ அணியில் இணைந்துக்கொண்டமை கண்டறியப்பட்டது.

Sunday Observer | FT

அதன் பின்னரான வருடத்தில் அதாவது 2019 ஆண்டு ஏற்பட்ட குருகந்த விகாரை பிரச்சனை காலத்திலும் மக்கள் மத்தியில் பணியாற்றி 2020 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாராளுமன்ற போட்டியின் போது இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தில் அஞ்சல் சேவைகள் மற்றும் பத்திரிகை நிபுணத்துவ மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்ட, சதாசிவம் வியலேந்திரன் இந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக பணியாற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற குருகந்த விகாரையில் குழுப்பநிலையுடன் தொடர்புடையவர்களும் வியாழேந்திரனின் புகைப்படத்துடன் தொடர்பு படுத்திய போது,

A screenshot of a cell phone  Description automatically generated

மேலும் நாம் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியபோது, அமைச்சர் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ உடன் இணைந்து இலங்கை பொதுஜன பெரமுனவை ஆதரித்ததாகவும், மேலும் முல்லைத்தீவு குருகந்த விகாரை தொடர்பில் ஏற்பட்ட குழப்பநிலையுடன் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.

குறித்த நிகழ்வு தொடர்பில் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது, கீழ்கண்ட பதிவும் எமக்கு காணக்கிடைத்தது. அதில் குறித்த சம்பவத்துடன் வியாழேந்திரனுக்கு எவ்விதமான தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Facebook Link | Archived Link

இதுதொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

நாம் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையில் குருகந்த விகாரையுடன் வியாழேந்திரனை தொடர்புபடுத்தி பகிரப்பட்ட பதிவுகள் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Avatar

Title:குருகந்த பிக்குவுடன் பிரச்சனையில் ஈடுப்பட்ட வியாழேந்திரனுக்கு அமைச்சு பதவியா?

Fact Check By: Nelson Mani

Result: False