
வவுனியாவில் அம்மன் சிலையிலிருந்து ரத்த கண்ணீர் வருவதாக ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Sathyakala Kamalakanthan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” சற்றுமுன் வவுனியாவிலுள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவம்…” என்று கடந்த 4 ஆம் திகதி (04.04.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதில் கீழ் காணப்படும் வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இம்மாதம் 5 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை வெளியான வீரகேசரியின் வார வெளியீட்டு பத்திரிக்கையிலும் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

Unp Jaffna news | Archived Link | Epaper link | Archived link
Fact Check (உண்மை அறிவோம்)
இதுதொடர்பாக, நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிவில் பதிவேற்றம் செய்திருந்த வீடியோவிலிருந்து ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை நாம் Google Reverse Image Tool பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
குறித்த ஆய்வின் போது எமக்கு எவ்விதமான ஆதாரங்களும் கிடைக்கப்படவில்லை.
இந்த வீடியோவிலிருந்த DANTV என்ற தொலைக்காட்சியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நாம் தேடுதல் மேற்கொண்டோம். அப்போது குறித்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்ட தினத்தன்று குறித்த வீடியோ DANTV யின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது உறுதியானது.

மேலும் குறித்த வீடியோ கடந்த வருடம் ஜுன் மாதம் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளமை எமது ஆய்விலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வீடியோவில் பதியப்பட்ட கமெண்டுக்களில் பலர் இது பழைய செய்தி என்று பதிவிட்டுள்ளமையும் எமக்கு கிடைத்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது,கடந்த வருடம் ஜுன் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினை தற்போது இடம்பெற்றதாக பரப்பி வருகின்றமை உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக வெளியான செய்தி,


மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலில் இணையத்தில் பரவி வருகின்ற குறித்த காணொளி பதிவும் எமக்கு கிடைக்கப்பட்டது.
குறித்த செய்தி உண்மையென நம்பி வீரகேசரி வார இதழில் (05.04.2020) தனது பத்திரிகையின் முதற்பக்கத்திலே குறித்த செய்தியினை பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அம்மன் கண்களில் இருந்து ரத்த கண்ணீர் வடிகிறது என்று பகிரப்படும் செய்தி கடந்த வருடம் வெளியான செய்தி என்பது சந்தேகமின்றி உறுதியாகிறது. பழைய செய்தியை தற்போது நிகழ்ந்தது போல வதந்தி பரப்பி வருகின்றனர்.