
INTRO :
கொரோன அச்சம் காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதா செய்தி வெளியாகியிருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Short News என்ற பேஸ்புக் கணக்கில் கொரோனா அச்சம் – அலரி மாளிகை தற்காலிகமாக முடக்கம்” என இம் மாதம் 22 ஆம் திகதி (22.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்து.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக
எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
பிரதமர் அலுவகம் இது தொடர்பாக அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
The news of Prime Minister’s Office and Temple Trees being temporarily shut down due to the COVID-19 virus is #FALSE pic.twitter.com/k91vlzlNBj
— PMO SriLanka (@SrilankaPMO) November 22, 2020
அதில் பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தேசிய நாளிதழொன்றில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதுமாகும் என தெரிவித்திருந்தனர்.
நாம் மேற்கொண்ட தேலுக்கு அமைய அலரி மாளிகை மூடல் என்று வெளியான செய்தி போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.