INTRO :
எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மாட்டு இறைச்சி சொசேஜஸில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Kamil Azard என்ற பேஸ்புக் கணக்கில் ” முஸ்லிம் சமூகமே அவதானம்.!

•••••••••••••••••••••••••••••••••••••••••••

மாட்டு இறைச்சி [பீஃவ் சொசேஜஸ்]

[Beef Sausages] எனும் பெயரில், பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளது😥

Elephant House நிறுவனத்தின் உணவுப் பண்டங்களை கொள்வணவு செய்வதை

முஸ்லிம்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

இதை zoom செய்து பார்த்துவிட்டு அனைவருக்கும் அவசரமாக பகிருங்கள்.

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇” என இம் மாதம் 09 ஆம் திகதி (09.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

பலரும் இதன் உண்மை தன்மையினை அறியாது பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

அதுமட்டுமல்லாது, ஒரு வீடியோ பதிவும் இதனுடன் பகிரப்பட்டிருந்தமையும் எமக்கு காணக்கிடைத்தது. அதில் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு மையத்திற்கு ஒருவர் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு உரையாடலை பதிவு செய்துள்ளனர்.

Graphical user interface, application  Description automatically generated

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

எமது குழுவினர் எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொடர்பாடல் குழுவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு, இது குறித்து வினவிய போது அவர்கள் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு தொடர்பினை மாற்றம் செய்தனர்.

நாம் அவரிடம் இது குறித்து வினவியபோது, எலிபன்ட் ஹவுஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் மாட்டு இறைச்சி சொசேஜஸில் பன்றி இறைச்சி கலக்கப்படுவதில்லை என தெரிவித்திருந்தார்.

குறித்த சொசேஜஸினை பைக்கற்று பண்ணும் பொதியினை அச்சிடும் பொழுது தவறுதலாக பன்றி இறைச்சி அதில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த பைக்கற்றுக்கள் சந்தைக்கு சென்று பாவணையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளின் பின்னரே தாங்கள் அறிந்துக்கொண்டதாகவும், அது உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது சந்தைப்படுதலுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

மேலும் அவர்கள் இதுவரையான காலப்பகுதியில் மாட்டு இறைச்சி சொசேஜஸில் ஒருபோதும், பன்றி இறைச்சி கலக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

நாம் மேற்கொண்ட தேடலின் போது, எலிபன்ட் ஹவுஸ் மாட்டு இறைச்சி சொசேஜஸில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதாக பகிரப்பட்ட தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:எலிபன்ட் ஹவுஸ் மாட்டிறைச்சி சொசேஜஸில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டுள்ளதா?

Fact Check By: Nelson Mani

Result: Missing Context