
INTRO :
ஆர்க்டிக் பிரதேசத்தில் 30 செக்கனுகளுக்கு தோன்றும் சந்திரன் 5 செக்கன்கள் சூரியனை மறைத்து செல்லும் வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

Pathmanathan Nathan என்ற பேஸ்புக் கணக்கில் “ Russia and Canada in Arctic…….
when the moon appears in this big size for 30 seconds and after blocking the Sun for 5 seconds then disappears
இயற்கை சக்திகளின் அற்புதமான காட்சி. ஆர்க்டிக் பிரதேசத்தில் முப்பது நொடிகளில் சந்திரன் தோன்றும் ஐந்து நொடிகளில் மட்டுமே சூரிய னை மறைத்து வரும் அற்புதமான காட்சி………. ” என இம் மாதம் 27 ஆம் திகதி (27.05.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் அவ்வீடியோவை பார்வையிட்ட போது, அது பூமியை விட பெரியதாகவும் அது பூமிக்கு அருகாமையில் கடக்கும் போது வீடியோவில் காணப்பட்ட ஆற்றில் அதன் நிழல் கூட தென்படவில்லை, இது எமக்கு குறித்த வீடியோ தொடர்பில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது.
மேலும் நாசாவின் கணிப்புப்படி பூமியை சந்திரன் நெருங்க கூடிய மிக குறைந்த தூரமாக சுமார் 226,000 மைல் (363,300 கிலோமீற்றர்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரன் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்ற நிலையில், குறித்த வீடியோவில் வழமைக்கு மாறாக சந்திரன் பூமியை நோக்கி வருவதை போன்ற காட்சி பதியப்பட்டுள்ளது.
இது குறித்து நாம் தேடிய போது இந்த வீடியோவை உருவாக்கிய நபரின் டிக்டொக் கணக்கு கிடைக்கப்பெற்றது. @aleksey__nz என்ற கணக்கில் சிஜிஐ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் காணொளிகளை தயாரிப்பவர் என அவரின் இன்ஸ்டெகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இது போன்ற பல்வேறு வீடியோக்கள் அவரின் டிக்டொக் கணக்கில் எம்மால் காணமுடிந்தது.
@aleksey__nz ##moon ##foryoupage ##cosmos ##2021 ##Odessa ##space
♬ оригинальный звук – AlEkSeY
நாம் மேற்கொண்ட தேடலுக்கு ஆர்க்டிகில் சூரியனை மறைத்து சென்ற சந்திரன் பரவும் வீடியோ கணினி வடிவமைப்பினை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ஆர்க்டிகில் சூரியனை மறைத்துச் சென்ற சந்திரன் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False