
நியூசிலாந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியின் வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை வார்டு மூடப்பட்டது என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Yaseer Arafath என்ற பேஸ்புக் கணக்கில் ”நியூசிலாந்து கொரோனா மருத்துவமனை வார்டு மூடப்பட்டது கடைசி நோயாளி வெற்றிகரமாக சிகிச்சைக்குப் பிறகு…. நமது நாட்டில் கொரோனாவுக்கு எப்போது பிரியா விடை கிடைக்குமோ??” என்று இம் மாதம் 14 ஆம் திகதி (14.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த வீடியோவில் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை visit italy என்ற சொல் வீடியோவில் மேல் முனையில் watermark இடப்பட்டிருந்தது. மேலும் வீடியோ முடிவில் அதே சொல் தென்பட்டது.


கொரோனா தொற்று இல்லாத நாடானது நியூஸிலாந்து! என அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Adaderana Link | Archived Link
கொரோனா தொற்று இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்தில் கடைசி நோயாளியும் குணமாகி வைத்தியசாலையினை விட்டு வெளியேறிய செய்தியை தொடர்ந்தே குறித்த வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை நமக்கு காணக்கிடைத்து.
குறித்த வீடியோவில் visit Italy என்ற சொல் பதியப்பட்டிருந்தமை எமக்கு வலுவான சந்தேகத்தினை ஏற்படுத்தியது.
பேஸ்புக்கில் visit Italy என்று தேடியபோது பல பக்கங்கள் எமக்கு காணக்கிடைத்தது. அதில் அதிக லைக் கொண்ட பேஸ்புக் பக்கத்தினை நாம் ஆய்விற்கு உட்படுத்தினோம்.

குறித்த பக்கத்தில் நாம் தேடிய காணொளி காணக்கிடைத்தது.

குறித்த வீடியோ இம்மாதம் 8 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதில் Matera’s hospital closes last coronavirus ward என்று பதியப்பட்டிருந்தது.
எமது இந்திய தமிழ் பிரிவும் குறித்த வீடியோவின் உண்மை தன்மையினை கண்டறிய ஆய்வினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இந்த வீடியோ நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மட்டேரா நகர மருத்துவமனையில் கொரோனா வார்டு மூடப்பட்டதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியாக வெளியேறுவது உறுதியாகிறது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வீடியோ நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் மட்டேரா நகர மருத்துவமனையில் கொரோனா வார்டு மூடப்பட்டதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியாக வெளியேறுவது உறுதியாகிறது.

Title:கொரோனா கடைசி நோயாளியின் சிகிச்சைக்குப் பின் நியூசிலாந்து மருத்துவமனை மூடல்- வீடியோ உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False