
தகவலின் விவரம்:

Ntamil.com என்ற பேஸ்புக் கணக்கில் ” #எதுவும்_நிலையில்லை #Arnold .
இங்கே இந்த சிற்பத்தின் அடியில் படுத்திருப்பவர் சாட்சாத் #MrOlympia #bodybuilder ஹாலிவுட் நடிகர் #அர்னால்ட் தான், அந்த சிலையும் அவர் தான்.. சில நாட்களாக அமெரிக்காவில் நடக்கும் கறுப்பர் வெள்ளையர் சண்டையில் சிலைகளை உடைப்பதால் இவர் தன் சிலையை பாதுகாக்க வந்து படுத்து கொண்டிருக்கிறாரோ என்று இந்த படத்தை பார்த்தவுடன் நினைத்தேன்.. ஆனால் விஷயம் #வேறு…
இந்த #ஹோட்டல் கட்டும்பொழுது அர்னால்ட் #ஆணழகனாக உச்சத்தில் இருந்தார்.. அப்பொழுது #அர்னால்டை பெருமைப் படுத்தும் விதமாக இந்த சிலையை இங்கே நிறுவியது இந்த ஹோட்டல் நிர்வாகம்.. அப்பொழுது #அர்னால்டுக்கு ஒரு #வாக்குறுதியை அளித்தது இந்த #ஹோட்டல் நிர்வாகம், அது, நீங்கள் எப்போது #வேண்டுமானாலும் இந்த ஓட்டலில் அறை எடுத்து #தங்கிக்கொள்ளலாம்.
பல ஆண்டுகள் கழித்து #அர்னால்ட் இப்போது அந்த #ஹோட்டலுக்கு சென்று ரூம் கேட்டிருக்கிறார் ஆனால் எல்லா ரூம்களும் #புக் ஆகி விட்டதால் உங்களுக்கு ரூம் கொடுக்க #முடியாது என்று சொல்லிவிட்டது இந்த ஹோட்டல் #நிர்வாகம்..இதனால் இவரின் #சிலையின் அடியிலேயே படுத்து விட்டார் #அர்னால்ட்.. ஆனால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு #எதிராக அல்ல..
தான் உச்சத்தில் இருந்த பொழுது எனக்கு #சிலை வைத்து எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கிக்கொள்ளலாம் என்று கொண்டாடியவர்கள்.. இன்று நான் அந்த நிலையை இழந்ததும் என்னையும் எனக்கு செய்து கொடுத்த #சத்தியத்தையும் #மறந்துவிட்டனர், எனவே உங்களின் #பிரபல்யத்தையும், உங்களின் அதிகாரத்தையும் என்றும் #நம்பாதீர்கள் நேரம் #மாறக்கூடியது புகழும் நேரம் வந்தால் ஓடி விடும் என்கிற செய்தியை உலகிற்கு சொல்லியிருகிறார் #அர்னால்ட் #ffzgym” என்று 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி (24.08.2017) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவு தற்போது வரை மக்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக ஆய்வினை மேற்கொண்ட போது குறித்த புகைப்படம் ஆர்னால்டின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்திலும் அவரது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்து.
குறித்த பதிப்பானது 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி குறித்த புகைப்படமானது அவரது சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.


Instagram Link | Archived link
குறித்த புகைப்படத்தில் ஆர்னால்ட் ” How Times Have changed ” என பதிவிட்டு உள்ளார்.
நாம் குறித்த புகைப்படம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியான செய்திகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டோம்.
அப்பொழுது ‘Daily Mail’ இணையத்தளத்தில் வெளியான செய்தியில் குறித்த புகைப்படத்தின் கீழ் ஆங்கிலத்தில் ”The actor pretended to sleep and possibly appear homeless as he posed underneath a statue of his former self in Ohio ” இவ்வாறான ஒரு பதிவு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதாவது, நடிகர் வீடற்றவர் போல் தன்னுடைய சிலைக்கு கீழ் தூங்குவது போன்ற புகைப்படம் என்று பதிவு செய்யதுள்ளனர்.

People.com வெளியாகியிருந்த செய்தியின் அடிப்படையில் ஆர்னால்டின் சிலையானது ஆடம்பர விடுதிக்கு முன்பாக அமைக்கப்படவில்லை. அது கிரேட்டர் கொலம்பஸ் கன்வென்ஷன் சென்டர் முன்பாக அமையப்பட்டுள்ளது.

நாம் இதனை உறுதி செய்து கொள்ள கூகுள் மேப்பின் ஊடாக மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த சிலை அங்கு தான் அமைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்து கொள்ள முடிந்தது.

2016 ஆம் ஆண்டு கொலம்பஸ் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தன் சிலைக்கு முன்பாக படுத்துக் கொண்டிருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ” காலம் எப்படி மாறுகிறது ” என அவரின் உத்தியோகப்பூரவ சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
ஆனால், அந்த புகைப்படத்தை வைத்து, அவர் திறந்து வைத்து ஹோட்டலிலேயே அறை வழங்காத காரணத்தினால் வீதியில் உறங்கினார் என போலியான தகவலினை மக்கள் மத்தியில் பரப்பி வந்துள்ளனர்.
எமது இந்திய தமிழ் பிரிவினர் இது குறித்தான ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதனை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.