
INTRO :
சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் உடனடி கைது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
Shaik Hosan Shaik என்ற பேஸ்புக் கணக்கில் ” சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் உடனடி கைது!” என இம் மாதம் 29 ஆம் திகதி (29.10.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் பகிரப்பட்ட வீடியோவிலிருந்து ஒரு screenshot எடுத்து Google Reverse Image Tool பயன்படுத்தி தேடலில் ஈடுப்பட்டோம்
அத்தேடலின் போது, ஆண் ஒருவர் தலையின் மீது சூப்பை ஊற்றியதற்காகவும் அவரின் கைகளை கடித்துள்ளதோடு பொலிஸ் அதிகாரிகளை தகாத வார்த்தையில் திட்டியமைக்காக குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
Theindependent | Archived Link
stomp.straitstimes.com | Archived Link
மேலும் நாம் மேற்கொண்ட தேடுதலின் போது Roads.sg என்ற பேஸ்புக் பக்கத்தில் முதலில் முகக்கவசம் அணியாமையால் பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என பதியப்பட்டுள்ளது.
பிறகு குறித்த பெண் முகக்கவசம் அணியாமைக்கு கைது செய்யப்படவில்லை எனவும், அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணமும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய சிங்கப்பூரில் மாஸ்க் அணியாவிட்டால் உடனடி கைது என பகிரப்படும் வீடியோவில் உள்ள பெண் ஒரு ஆண் மீது சூப்பை ஊற்றியமை மற்றும் அவரது கையை கடித்தமைக்காவும் மேலும் பொலிஸாரை தகாத வார்த்தையினை பயன்படுத்தி திட்டியமைக்காகவுமே கைது செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.