INTRO :
இலங்கை தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே இடம்பெற்றுவரும் சுற்றுத்தொடரில் இலங்கை அணி வீரரான குசல் மெண்டீஸின் துடுப்பாட்டத்தில் தடுமாறுவதற்கு தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் வெளிநாட்டு ரசிகை பதாகை ஏந்தியுள்ளதாக ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

Mushab Ahamed என்ற பேஸ்புக் கணக்கில் ” குசல் மென்டிஸ் மேடைக்கு வரவும்” என இம் மாதம் 04 ஆம் திகதி (04.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

முதலில் நாம் குறித்த புகைப்படத்திலிருந்த Cricket bats for sale. Barely Used என்ற வசனத்தை கூகுளில் தேடுதல் மேற்கொண்டோம். அத்தேடலின் போது, timesnownews.com என்ற இணையத்தளத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தி எமக்கு கிடைக்கப்பெற்றது.

குறித்த செய்தியில் நிவூஸிலாந்து கிரிக்கெட் ரசிகை ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ பர்ன்ஸ் கேலி செய்து பதாகை ஏந்திய புகைப்படம் காணப்பட்டது.

timesnownews.com | Archived link

தற்போது குசல் மெண்டீஸை கேலி செய்து பதாதை ஏந்திய வெளிநாட்டு ரசிகை என பகிரப்படும் புகைப்படமும் ஒன்று தான் என கண்டறியப்பட்டது.

நமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுக்கு அமைய அவுஸ்ரேலிய வீரர்களுக்கு பயன்படுத்தி கேலி பதாகையினை இலங்கை வீரருக்கு பயன்படுத்தியதாக பகிரப்பட்டு வருகின்றது.

இலங்கை சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:குசல் மெண்டீஸ் தொடர்பாக வெளிநாடு ரசிகை பதாகை ஏந்தினாரா?

Fact Check By: Nelson Mani

Result: Altered