INTRO :
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புனித அல்-குர்ஆன் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” சுப்ஹானல்லாஹ்!!

1912 ல் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட

புனித அல்-குர்ஆன்.100 ஆண்டு தாண்டியும் அழியாமல் இருக்கின்றன. “ என கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற புகைப்படத்தினை நாம் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தியபோது, இது பல வருடங்களாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

2014 ஆம் வருடத்தில் கேத்தரின் மெக்வெர் என்ற நபரின் பிளாக் பக்கத்தில் பதிவாகியிருந்த ஒரு பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில், “சான் பிரான்சிஸ்கோவில் ஒரு கலைக் கூடத்தில் பார்வையிட்ட போது புத்தகங்களை படிக மயமாக்கல் செய்யப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். புத்தகத்தை எப்படி படிக மயமாக்குவது என்று விசாரித்த போது அதற்கு 400 டாலர் கொடுத்து பயிற்சி வகுப்பில் சேர வேண்டும் என்றனர். இதனால் வீடு திரும்பிய நான் கூகுளில் இது பற்றித் தேடினேன். புத்தகத்தை மற்றும் இதர பொருட்கள் மீது கிரிஸ்டல் உருவாக்குவது எப்படி என்று இலவசமாகவே பல ஆலோசனைகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று 6 டாலருக்கும் குறைவான அளவில் பொருட்கள் வாங்கி கிரிஸ்டலைசேஷன் செய்தேன்” என பதிவிட்டிருந்தார்.

மேலும், அல்-குர்ஆன் என இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற புத்தகத்தின் புகைப்படமும் காணக்கிடைத்தது. அதில், அவர் ஜெர்மன் – ஆங்கிலத்திற்கான அகராதி என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

stuffyoucanthave.blogspot.com| Archived

ஏ.எஃப்.பி வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக்கில் கேத்தரின் மேக்வேரிடம் இது குறித்து விசாரித்தவேளையில் , “இது பைபிளோ, குர்-ஆனோ, வேறு எந்த ஒரு மத புத்தகமோ இல்லை. ஜெர்மனி – ஆங்கில அகராதி புத்தகம். என்னுடைய புத்தகத்தை பைபிள் அல்லது வேறு ஒரு மதத்தின் ஆச்சரியப்படத்தக்க அதிசய புத்தகம் என்று பகிர்ந்து வருவது வேடிக்கையாக உள்ளது” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்ட புனித அல்-குர்ஆன் என்ற செய்தி முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய கப்பலில் கிடைத்த புனித அல்-குர்ஆன் இதுவா?

Fact Check By: Nelson Mani

Result: False