
இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச மரணித்ததாக பேஸ்புக்கில் தகவல் பரவி வருகின்றது.
இது தொடர்பான உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் எமது ஆய்வினை மேற்கொள்ள திட்டமிட்டோம்.
தகவலின் விவரம்:

Kinniya King FirdhouZe என்ற பேஸ்புக் கணக்கில் “இலங்கை முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலமானார். இருளில் மூழ்கியது இலங்கை“ என்று நேற்று (12.11.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த பதிவேற்றத்தில் EELAMALAR.COM இன் செய்தி லிங்கினையும் இணைத்துள்ளனர்.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு மேற்கொண்ட ஆய்வில்,முதலில் அதிலிருந்த புகைப்படத்தினை Google Reverse Image Tool ஐ பயன்படுத்தி தேடலில் ஈடுப்பட்டோம்,

குறித்த ஆய்வின் போது Eelamalar.com என்ற இணையத்தளம் கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலமானார் என செய்தி வெளியிட்டு வந்துள்ளமை காணக்கிடைத்தது.
மேலும் நாம் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பேஸ்புக் பதிப்பிலுள்ள லிங்கினை கிளிக் செய்து பார்த்தபோது, குறித்த இணையத்தளம் அந்த செய்தியினை நீக்கியமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த செய்தி நேற்று வெளியிடப்பட்டுள்ளது, அதேவேளையில் நேற்று மகிந்த ராஜபக்ச அவர்கள் மினுவாங்கொடையில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாடும் காணொளி காணக்கிடைத்தது.

முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மரணம் என்ற செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.