
நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா காலமானார் என இணையத்தில் செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.
தகவலின் விவரம்:

Rizvi Hussain என்ற பேஸ்புக் கணக்கில் “நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா காலமானார்,“ என்று கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் பரவை முனியம்மா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள இணைய செய்திதளங்களை ஆய்வு செய்தோம்.
மாலை மலர்

குறித்த செய்தியில் நடிகர் அபி சரவணன், அவர்களே பரவை முனியம்மாவை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அபி சரவணனின் பேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
அதில் அவர் பரவை முனியம்மா சுகமாக உள்ளார். வதந்திகளை பரப்ப வேண்டாம் என்ற பதிவோடு, ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.

குறித்த வீடியோ பதிவில் பரவை முனியம்மாவிற்கு இரத்தம் ஏற்றப்பட்டு கொண்டுள்ளதாகவும் அவருக்கு எந்த ஆபத்துமில்லை என்று தெரிவித்துள்ளதோடு, தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறிவித்துள்ளார்.
மேலும் பரவை முனியம்மாவே உரையாடிய வீடியோ ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பரவை முனியம்மா மரணிக்கவில்லை என இணையத்தளங்களின் வெளியான செய்தி
Dinamalar | News Link | Archived Link |
Nakkheeran | News Link | Archived Link |
Puthiyathalaimurai | News Link | Archived Link |
Hindu Tamil | News Link | Archived Link |
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பரவை முனியம்மா மரணித்துவிட்டதாக வெளியான செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.