
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமசந்திர இஸ்லாம் மதத்தினை தழுவியதாக பேஸ்புக் பக்கங்களில் பகிரப்படுகின்றது.
குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.
தகவலின் விவரம்:

Kalmunai Pasanga என்ற பேஸ்புக் பக்கத்தில் “இன்று வெள்ளி கிழமை ஜும்மாவை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா…
அதிகமாக செயார் செய்யுங்கள்… ” என்று இன்று (25.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் குறித்த பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த Comments ஐ நாம் தேடுதலுக்கு உட்படுத்தினோம்.

அதில் பலர் குறித்த புகைப்படமானது நம்பமுடியவில்லை என தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது.
மேலும், இது உண்மையா..? என பலர் கேள்வி கேட்டிருந்ததும் காணக்கிடைத்தது.
குறித்த புகைப்படத்தினை நாம் Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தினோம்,

அதில் குறித்த புகைப்படமானது 2016 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டதாக காணப்பட்டது.
மேலும் குறித்த Puttalamtoday இணையத்தளத்திற்கு சென்று அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படத்தினை மீண்டும் நாம் Google reverse image tool ஐ பயன்படுத்தி தேடுதலுக்கு உட்படுத்தினோம்,

இதன்போது, 2011 ஆம் ஆண்டு Flickr.com/ல் குறித்த புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

Flickr.com இணையதளத்தில் குறித்த புகைப்படங்கள் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படமானது, அவரது அரசியல் பயணத்தினை ஆரம்பிக்கும் போது, எல்லா மத ஸ்தலங்களுக்கு சென்று ஆசிர்வாதம் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றுதான் இது.

கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் 12 ஆம் திகதி (2018.10.12) அன்று நடந்த ஊடகசந்திப்பில் தான் பௌத்த மதத்தை தான் பின்பற்றுகின்றேன் என ஹிருனிகா தெரிவித்த காணொளியும் கிடைக்கப்பெற்றது.
மேலும், அவர்களின் தாயாரை தொடர்புக்கொண்டு நாம் குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது, அவர் ஹிருனிமா இஸ்லாத்திற்கு மதம் மாறியதாக வெளியான செய்தி முற்றிலும் போலியானது என எமக்கு தெரிவித்தார்.
முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஹிருனிகா என வெளியான புகைப்படம் தவறான ஒன்றாகும். அது 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
